வீட்டு வாடகை தராததால் வீட்டுக்கு வெல்டிங்.. குடியிருந்தவரை துன்புறுத்திய பிரபு தேவாவின் சகோதரர்!
சென்னை: பிரபல நடிகர் பிரபு தேவாவின் சகோதரர், தனது வீட்டில் குடியிருந்தவரை வீட்டிற்குள் வைத்து பூட்டி துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குநர் சசுந்தரத்தின் மகனரும், பிரபு தேவாவின் தம்பியுமா நாகேந்திர பிரசாத், பாம்பே படத்தின் ஹம்மா ஹம்மா பாடலுக்கு ஆடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர், ஜீன்ஸ், நினைவிருக்கும் வரை, சாக்லேட், மின்னலே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நாகேந்திர பிரசாந்த்: இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாந்த்தின் வீடு காலியாக இருந்த போது விக்னேஷ் என்பவர் வாடகைக்கு வந்துள்ளார். அவரிடம் எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்துக்கு வீட்டை லீசுக்கு விட்டு இருப்பதாகவும் அவர்களிடம் 25 லட்சம் ரூபாய் கொடுத்து விடுங்கள். அவர்கள் மாதம் தோறும் 36 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வாடகைக் செலுத்தி விடுவார்கள் என்று நாகேந்திர பிரசாத்தின் மனைவி கூற விக்னேஷ் அந்த குடியேறியுள்ளார்.
வாடகை தரவில்லை: ஒருவருடம் மட்டும் வீட்டு வாடகை கொடுத்த எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் நிறுவனத்தினர் பின்னர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டு வாடகை தரவில்லை எனக்கு, நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள் வீட்டை பூட்டி வெல்டிங் வைத்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், வீட்டில் செல்லப்பிராணி இருப்பதாகவும், வீட்டை பூட்டி சீல் வைத்து இருப்பதாகவும் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் விரைந்து சென்று வெல்டிங்கை உடைத்து சீலை எடுத்தனர்.
அது என் வீடு: இதுகுறித்து பிரபுதேவாவின் சகோதரை தொடர்பு கொண்டு பேசிய போது, அது என்னோட வீடு, என்னோட வீட்டுக்குத்தான் நான் பூட்டு போட்டேன். அது ஒன்னும் தப்பில்லையே. அவருடன் எந்த ஒரு அக்ரிமெண்டும் நான் போடவில்லை, யாருக்கு பணத்தை கொடுத்தார் என்பது எனக்கு தெரியாது என நாகேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











