வேட்டையன் படத்தில் சர்ச்சை காட்சி.. பள்ளிக்கு அவப்பெயர்.. இயக்குநர் மீது புகார்!

சென்னை: நேற்று தியேட்டரில் வெளியான வேட்டையன் படத்தில் கோவில்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியை பாடம் நடத்துவதை தவறாக சித்தரித்து மொபைல் மூலம் பகிர்வதாக காட்சி இடம் பெற்று இருந்தது. அந்த அக்காட்சியை நீக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் இயக்குநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, நேற்று தியேட்டரில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. படத்தை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து திருவிழாப்போல கொண்டாடினர். ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை ஆர்வத்துடன் ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்தனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

vettaiyan rajini police complaint

வேட்டையன்: ஜெய்பீம் படத்தில் லாக்கப் மரணம் குறித்து, காவல் நிலையத்தில் நடக்கும் கொடுமை குறித்தும் படத்தில் தைரியமாக பேசி இருந்த இயக்குநர் ஞானவேல், இப்படத்தில் நீட் தேர்வில் நடக்கும் ஊழல் குறித்தும்,ஏழை மக்களுக்கு சரியான முறையில் கல்வி போய் சேருவது இல்லை என்றும். கல்வி என்ற பெயரில் நடக்கும் பல பிரச்சனை குறித்தும் படத்தில் சொல்லி இருக்கிறார். மக்களுக்காக பல நல்ல கருத்தை கொண்ட படம் என மக்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில், படத்தில் இடம் பெற்று இருக்கும் காட்சியை நீக்கக்கோரி இயக்குநர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சி: வேட்டையன் பபடத்தில் கோவில்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியை பாடம் நடத்துவதை தவறாக சித்தரித்து போன் மூலம் பலருக்கு பகிர்வதாக காட்சி போல காட்சி இடம் பெற்று இருந்தது. இதற்கு, கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகார் மனுவில், கோவில்பட்டி காந்திநகரில் உள்ள உயர்நிலைப்பள்ளி 2009 -2010ம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த பள்ளியாக விருதுபெற்றதாகவும், வேட்டையன் படத்தில் உள்ள காட்சியால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், அக்காட்சியை நீக்க வேண்டும் என கோரியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X