வலிமை டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மீது பாய்ந்தது வழக்கு

சென்னை : வலிமை டைரக்டர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ஆக்ஷன் படமான வலிமையை ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் தயாரித்த இந்த படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசாகி பாக்ஸ் ஆபீசில் செம கலெக்ஷன் பார்த்து வருகிறது. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட மூன்றே நாட்களில் 100 கோடி கலெக்ஷன் கிளப்பில் இணைந்துள்ளது. முதல் நாள் வசூலிலேயே பல படங்களில் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

ஒரு வாரத்தில் இத்தனை கோடியா

ஒரு வாரத்தில் இத்தனை கோடியா

கடந்த 5 நாட்களில் உலகம் முழுவதும் 150 முதல் 160 கோடி வரை வசூலித்துள்ளது. விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தாலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக ட்விட்டரில் வலிமை கலெக்ஷன் பற்றிய பேச்சாக தான் உள்ளது. குடும்ப ரசிகர்களும் வலிமை படத்தை கொண்டாடி வருகின்றனர்.

வலிமைக்கு தடை கேட்டு புகார்

வலிமைக்கு தடை கேட்டு புகார்

இந்நிலையில் வலிமை படத்தில் ஆரம்பத்திலேயே வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்கள் குண்டர்களை போல் செயல்படுவதாகவும் காட்டப்பட்டுள்ளதாக கூறி பெண் வழக்கறிஞர் சாந்தி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வலிமை படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது வலிமை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

வினோத், போனி கபூர் மீது வழக்கு

வினோத், போனி கபூர் மீது வழக்கு

இதைத் தொடர்ந்து இதே பிரச்சனையை காரணம் காட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வலிமை டைரக்டர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களை தவறாக சித்தரித்து படம் எடுத்துள்ள அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

Recommended Video

Valimai படத்தில் Karthikeya -விற்கு ஜோடியாக நடித்த Sara யார்?? | Valimai Banij
என்ன செய்ய போகிறது படக்குழு

என்ன செய்ய போகிறது படக்குழு

தொடர்ந்து வலிமை படத்திற்கு எதிராக அளிக்கப்பட்டு வரும் புகார்களால் படக்குழுவும், ரசிகர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று படத்தில் உள்ள 14 நிமிட காட்சிகளை கத்தரித்து திரையிட்டு வருகின்றனர். தற்போது அடுத்தடுத்து புகார்கள் பதிவாகி வருவதால் என்ன செய்வதென தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். ரசிகர்களும் சோர்வடைந்துள்ளதால் இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X