நயன்தாரா–விக்னேஷ் சிவனை கைது செய்ய போலீசில் புகார்...ஏன் என்னாச்சு ?

சென்னை : டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விக்னேஷ் சிவன், பிறகு சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்து நடிகரானார். தனது படங்களில் சில பாடல்களை எழுதி பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்தார். இவர் 2015 ம் ஆண்டு விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார்.

நானும் ரவுடி தான் படம் சூப்பர் ஹிட் ஆனதுடன், இந்த படத்தில் சேர்ந்த வேலை செய்யும் போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் சேர்ந்து 2019 ல் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினர். கூழாங்கல், ராக்கி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏகே 62 வை கொண்டாடி விக்னேஷ் சிவன்

ஏகே 62 வை கொண்டாடி விக்னேஷ் சிவன்

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் 62வது படமான ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் டீமுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார். இந்த தகவலையும் அவரே பகிர்ந்திருந்தார்.

ரவுடி பிக்சர்சை தடை செய்யனும்

ரவுடி பிக்சர்சை தடை செய்யனும்

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கண்ணன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயர் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதால் அந்த நிறுவனத்தை தடை விதிக்க வேண்டும்.

விக்கி-நயனை கைது செய்யுங்கள்

விக்கி-நயனை கைது செய்யுங்கள்

இது தவறான முன்னுதாரணமாக இருப்பதால் விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான ரவுடி பக்சர்சின் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். அதோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

ரவுடி பிக்சர்சால் மக்கள் அச்சம்

ரவுடி பிக்சர்சால் மக்கள் அச்சம்

ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயர் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை உடனடியாக கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X