இதே வேலையா போச்சு.. புனித பைபிளை கொச்சைப்படுத்தினாரா கரீனா கபூர்.. பரபரப்பு புகார்!
மும்பை: கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கைய நடிகை கரீனா கபூர் கான் கொச்சைப்படுத்தி விட்டதாக கிறிஸ்தவ அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஜூலை 9ம் தேதி நடிகை கரீனா கபூர் எழுதி வெளியிட்ட புத்தகத்தின் டைட்டில் தங்கள் மத நம்பிக்கையை சீண்டும் விதமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக சீதாவாக கரீனா கபூர் கான் நடிக்கக் கூடாது என இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியருடன் திருமணம்
நடிகை கரீனா கபூர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நடிகர் சைஃப் அலி கானுக்கு இரண்டாவது மனைவியானார். ஏற்கனவே இந்த தம்பதியினருக்கு தைமூர் என்கிற ஒரு மகன் உள்ள நிலையில், இந்த ஆண்டு ஜே எனும் ஆண் குழந்தையும் பிறந்தது.

சீதா கதாபாத்திரத்தில்
ராமாயண இதிகாசத்தை மையமாக கொண்டு பிரம்மாண்டமாக உருவாக உள்ள சீதா படத்தில் நடிகை கரீனா கபூர் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், இந்து அமைப்பினர் கரீனா கபூர் கான் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

புனித பைபிள்
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை நடிகை கரீனா கபூர் கொச்சைப்படுத்தி விட்டார் என மகாராஷ்ட்ராவின் பீட் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்க கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டைட்டில் சர்ச்சை
நடிகை கரீனா கபூர் எழுதிய புத்தகத்தின் டைட்டில் தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் சுமந்த அனுபவத்தையும் பிரசவித்த அனுபவத்தையும் புத்தகமாக எழுதிய கரீனா கபூர் அந்த புத்தகத்திற்கு Pregnancy Bible எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து அவமதிப்பு
பிற மதத்தினரின் நம்பிக்கையை தொடர்ந்து நடிகை கரீனா கபூர் அவமதித்து வருவதாக கிறிஸ்தவ அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். மேலும், அனைத்திந்திய சிறுபான்மை வாரியமும் கரீனா கபூரின் இந்த புத்தகத்திற்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











