பர்ஸ்ட் சூர்யா... இப்போ ஜோதிகா... சிவக்குமார் குடும்பத்துக்கு பிரச்சினை மேல பிரச்சினையா வருதே!

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர், ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படக் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Recommended Video

Jothika Raatchasi on Case : அழகான ராட்சசி, அசிங்கமான ராட்சசியாகியுள்ளார்- வீடியோ

சென்னை: ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படக் குழுவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் சூர்யா. அவரது மனைவி நடிகை ஜோதிகா நடித்த ராட்சசி படமும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

ராட்சசி படத்தில் அரசு பள்ளிகளின் நிலையை பற்றி பேசியிருப்பார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் முறையாக வேலை செய்யாமல் சம்பளவம் வாங்குவதாக அதில் கூறப்பட்டிருக்கிறது.

Police complaint lodged against Jyothikas Raatchasi

இந்த விவகாரம் அரசு பள்ளி ஆசிரியர்களை கோபமடைய செய்துள்ளது. ராட்சசி படத்தை தடைசெய்ய வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், " கடந்த 5ம் தேதி வெளியான ராட்சசி படத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வேண்டுமென்றே எங்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார்கள்.

முற்போக்கு போர்வையில் போலியான விளம்பரம் மூலம் வியாபாரம் தேடும் முயற்சியே ராட்சசி. ஆசிரியர்கள் ஜாதி வெறியை புகுத்துகிறார்கள் என்பது போன்ற தவறான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் முயச்சியாகும்.

எனவே ராட்சசி படத்தினை தடைசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும். இயக்குனர் கவுதம்ராஜ் மற்றும் வசனகர்த்தா பாரதிதம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செல்பி விவகாரத்தில் நடிகர் சிவக்குமார் இரண்டு முறை சர்ச்சையில் சிக்கினார். தற்போது கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோதிகாவுக்கும் ராட்சசி ரூபத்தில் சிக்கல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X