சாய் பல்லவியை கைது செய்ய புகார்.. அதிகரிக்கும் பிரச்சனை.. படத்திற்கு சிக்கலா? புரமோஷனா?

ஹைதராபாத்: நடிகை சாய் பல்லவி வெளியிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

சாய் பல்லவி, ராணா டகுபதி மற்றும் பிரியாமணி நடிப்பில் உருவாகி உள்ள விராட பர்வம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், அந்த படத்தின் புரமோஷனுக்கான பேட்டியில் சாய் பல்லவி பேசியதற்கு எதிராக எதிர்ப்புகளும் ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.

சாய் பல்லவியின் ஒப்பீடு

சாய் பல்லவியின் ஒப்பீடு

விராட பர்வம் படத்திற்கான புரமோஷன் பேட்டியில் கலந்து கொண்ட சாய் பல்லவி ஒரு கேள்விக்கு சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்தேன். அதில் சொல்லப்படுவது போல காஷ்மீர் பண்டிதர்கள் அங்குள்ள இஸ்லாமியர்களால் கொல்லப்படுகிறார்கள் என்றால், அதே போலத்தன் இந்தியாவின் ஒரு பகுதியில் அதிலும் கோவிட் காலத்தில் மாடுகளை கொண்டு சென்ற ஒரு இஸ்லாமியரை சில இந்துக்கள் ஜெய்ஸ்ரீராம் சொல்லு என சித்ரவதை செய்தனர். மதத்தின் பெயரால் எங்கேயும் யாருக்கும் எந்தவொரு தொல்லையும் கொடுக்க கூடாது என்பது தான் தனது கருத்து என்று பேசினார்.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

இந்நிலையில், பாஜகவினருக்கும் இந்து மக்களுக்கும் எதிராக சாய் பல்லவி பேசி விட்டார் என பெரும் பிரச்சனையை வலது சாரி அமைப்புகள் கிளப்பி உள்ளன. மேலும், நடிகை சாய் பல்லவிக்கு மிரட்டல்களும், எச்சரிக்கைகளும் விடுத்து வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஒரு படி மேலே சென்று அவர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்திலேயே புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

காஷ்மீர் படுகொலையையும் பசு பாதுகாவலர்கள் செயலையும் ஒப்பிட்டு பேசியதற்காக
ஹைதராபாத்தில் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த அகில் என்பவர் புதன்கிழமையன்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சாய் பல்லவி அப்படி ஒப்பிட்டு பேசி மிகப்பெரிய தவறை செய்துள்ளார் என்றும் அவரையும் விராட பர்வம் படத்தின் இயக்குநர் வேணு உடுகலாவையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

எஃப்.ஐ.ஆர் போடல

எஃப்.ஐ.ஆர் போடல

பஜ்ரங் தள் அமைப்பினரின் புகாரை பெற்றுக் கொண்ட ஹைதராபாத்தின் சுல்தான் பஜார் காவல் நிலைய போலீசார், அது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் ஏதும் இதுவரை பதிவு செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை செய்யப்படும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரச்சனையா? புரமோஷனா?

பிரச்சனையா? புரமோஷனா?

சினிமா பிரபலங்கள் மற்ற நேரங்களில் எந்தவொரு கருத்தையும் சொல்லாமல், குறிப்பாக தங்கள் படங்கள் வெளியாகும் போது இதுபோன்ற சர்ச்சைகளை கொளுத்திப் போடுவதற்கு பின்னணியில் அவர்கள் படத்தின் புரமோஷன் தான் இருப்பதாகவும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. நடிகை சாய் பல்லவிக்கு இந்த கருத்து பிரச்சனையை உருவாக்குமா? அல்லது புரமோஷனாக மாறுமா? என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X