விஸ்வரூபம் எடுக்கும் விஷால் பிரச்சனை.. மர்ம நபர்களால் உடைத்து நொறுக்கப்பட்ட மேனேஜர் கார்
சென்னை: நடிகர் விஷாலின் மேனேஜரின் கார், மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள விஷயம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
விஷாலின் அலுவலகத்தில் அக்கவுன்டன்டாக பணியாற்றி வந்த ரம்யா, 45 லட்சம் மோசடி செய்ததாக அண்மையில் புகார் அளித்து இருந்தார்.
அந்த புகாரை கொடுத்த விஷாலின் மேனேஜர் ஹரியின் கார், தற்போது அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரம்யாவின் தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரிக்க போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விஷாலும் வில்லங்கமும்
நடிகர், தயாரிப்பாளர் தற்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ள விஷாலை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. மிஷ்கினுடன் சண்டை, நடிகர் சங்க விவகாரம், தற்போது, தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் கணக்கருடன் பிரச்சனை என தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.

45 லட்சம் மோசடி
நடிகர் விஷாலின் அலுவலகத்தில் வேலை செய்து வந்த கணக்கர் ரம்யா, என்பவர் சுமார் 45 லட்சம் வரை தன்னிடம் இருந்து மோசடி செய்துள்ளதாக, அண்மையில் விஷால் தரப்பு புகார் அளித்திருந்தது. மேலும், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், இது தொடர்பாக விஷாலின் மேனேஜர் ஹரி புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அடித்து நொறுக்கப்பட்ட கார்
இந்நிலையில், தற்போது நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரியின் கார், அவரது வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை அந்த காரை பார்த்த அவர் அப்படியே ஷாக் ஆகி போயுள்ளார். அனைத்து கண்ணாடிகளும், உடைத்து நொறுக்கப்பட்ட நிலையில், கார் முழுவதும் டேமேஜ் ஆகி இருந்ததாம்.

புகார்
தனது கார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரவோடு இரவாக அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், மேனேஜர் ஹரி, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகாரையும் கொடுத்துள்ளார். மேலும், இந்த சம்பவத்துக்கு கணக்கர் ரம்யா காரணமாக இருப்பாரா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்.

விஷால் மீது புகார்
முன்னதாக அக்கவுன்டன்ட் ரம்யா, விஷால் மற்றும் மேனேஜர் ஹரி தன்னை அடித்து துன்புறுத்தினார்கள் என்றும், தனது காரை விஷால் பறித்துக் கொண்டார் என ரம்யாவும் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். இதனால், யார் மீது குற்றம் இருக்கிறது. யார் சொல்வது உண்மை என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறை செயல் பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











