நடிகை ராதாவிடம் செக்ஸ் மோசடி- பைசூலின் பாஸ்போர்ட் முடக்கம்
சென்னை: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதாவால் செக்ஸ் மோசடி குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் பைசூலின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
சுந்தரா டிராவல்ஸ்', 'அடாவடி', 'மானஸ்தன்' உள்ளிட்ட படங்களில் நடித்த ராதா சினிமா பைனான்சியர் பைசூல் மீது பரபரப்பான செக்ஸ் மோசடி மற்றும் ரூ 50 லட்சம் பணம் மோசடி புகார் கூறினார்.

மேலும் தன்னுடன் அவர் இருந்த படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து மிரட்டுவதாகவும் கூறினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பைசூலிடம் விசாரணை நடத்த கமிஷனரும் சம்மன் அனுப்பினர். ஆனால் ராதா தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறுகிறார் என்று அறிக்கை விட்டு தலைமறைவானார் பைசூல்.
ராதா பற்றிய ரகசியங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் அறிவித்தார். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு இரண்டு முறை மனு தாக்கல் செய்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து ராதா மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரிடம் மீண்டும் புகார் அளித்தார். பைசூல் சாட்சிகளை கலைக்கவும், என் மேல் பொய் புகார் அளிக்கவும் முயற்சிக்கிறார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வடபழனி போலீசார் நேற்று பைசூலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பைசூல் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர்.
பைசூல் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். பைசூலை விரைவில் கைது செய்யவும், தீவிரம் காட்டுகிறார்கள். அவர் தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்காணித்து வருகிறார்கள். சில தினங்களில் பைசூல் கைதாவார் எனத் தெரிகிறது.
Police detained the passport of Faizul, a financier who is the prime accused of actress Radha's sex cheating case.


Click it and Unblock the Notifications











