twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபாச காட்சிகள்.. சர்ச்சை வசனங்கள்.. காட்மேன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது பாய்ந்தது வழக்கு!

    |

    சென்னை: ஆபாச காட்சிகள் மற்றும் சர்ச்சைக்குரிய வசனங்கள் நிறைந்த காட்மேன் வெப்சீரிஸின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Recommended Video

    Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?

    டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இந்தத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

    இந்த வெப்சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் வசனங்களும் ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

    என் ஹஸ்பன்டை அம்மா வீட்டுக்கு அனுப்ப முடியுமா? என்னால முடியலைங்க..சோனு சூட்டிடம் உதவிகேட்ட பெண்!என் ஹஸ்பன்டை அம்மா வீட்டுக்கு அனுப்ப முடியுமா? என்னால முடியலைங்க..சோனு சூட்டிடம் உதவிகேட்ட பெண்!

    டீசர் நீக்கம்

    டீசர் நீக்கம்

    இதனால் அந்த வெப் சீரிஸ்க்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த வெப்சீரிஸின் டீசர் யூட்யூப் சேனலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த வெப்சீரிஸ் தொடரை தடை செய்ய வேண்டும் என்று இந்து மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் எதிர்ப்புகள் எழுந்தன.

    ஜூன் 12ஆம் தேதி

    ஜூன் 12ஆம் தேதி

    சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இந்த தொடர்பாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் திரைப்படங்களை விட வெப் சீரிஸ்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில், ஜீ 5 நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு

    போலீசார் வழக்குப்பதிவு

    ஆனால் பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு, போலீஸில் குவிந்த புகார்கள் காரணமாக வெப்சீரிஸ் ரிலீஸ் செய்யப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காட்மேன் வெப்சீரிஸின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது சென்னை மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ஆஜராக உத்தரவு

    ஆஜராக உத்தரவு

    மேலும் நாளை மறுநாள் இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். வெப்சீரிஸ்களை தணிக்கை செய்ய வேண்டும் என பாஜகவின் எச் ராஜா உள்ளிட்ட பலரும் போலீஸில் புகார் அளித்து வந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    English summary
    Police filed case against god man webseries director and producer. Many given complaint on God man web series for its controversy dialogue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X