மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்.. ஜோ மைக்கேலை கொலை செய்ய திட்டம்.. போலீஸ் வழக்குப்பதிவு!

சென்னை: நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இவர் 2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால் அதில் தனக்கு திருமணம் ஆனதை அவர் மறைத்ததாகவும் வயது குறித்து தவறான தகவல் அளித்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது.

மீரா மிதுன் மீது புகார்

மீரா மிதுன் மீது புகார்

இதனை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப்பெற்றது. இதையடுத்து அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றி விட்டதாகவும் பல்வேறு காவல்நிலையங்களில் மீரா மிதுன் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இதனால் நடிகை ரஞ்சிதாவும் மீரா மிதுன் தன்னிடம் பெற்ற 15 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் இழுத்தடிப்பதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பங்கேற்றார். மீரா மிதுன் மீதான புகார் தொடர்பாக போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கே சென்று விசாரித்தனர்.

வெளியேற்றப்பட்ட மீரா

வெளியேற்றப்பட்ட மீரா

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன் மீது தவறான குற்றச்சாட்டைக் கூறி மக்களின் கோபத்திற்கு ஆளானார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

தாக்குதல் நடத்த திட்டம்

தாக்குதல் நடத்த திட்டம்

இந்நிலையில் தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவின் பணப்பிரச்சனையில் மீரா மிதுன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தன்மீது தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதைத்தொடர்ந்து மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த புகார் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X