சொகுசு விடுதியில் நைட் பார்ட்டி.. குடியும் கும்மாளமுமாய் இருந்த நடிகை.. அள்ளிய போலீஸ்!

சென்னை: சொகுசு விடுதியில் நள்ளிரவு பார்ட்டியில் குடியும் கும்மாளமுமாய் இருந்த நடிகை உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐ லவ் இந்தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கவிதா ஸ்ரீ. பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

பல பாடங்களில் வில்லி கேரக்டரில் நடித்துள்ளார். ஜெய்ஹிந்த், கும்மிப்பாட்டு, காதலன் உட்பட தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவிதா ஸ்ரீ.

நைட் பார்ட்டி

நைட் பார்ட்டி

காதலன் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார் நடிகை கவிதா ஸ்ரீ. இந்நிலையில் நடிகை கவிதா ஸ்ரீ சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள கானத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து நைட் பார்ட்டி பண்ணியுள்ளார்.

குடியும் கும்மாளமுமாய்

குடியும் கும்மாளமுமாய்

கடந்த சனிக்கிழமை இரவு நடிகை கவிதா ஸ்ரீ ஏற்பாடு செய்த இந்த இரவு பார்ட்டியில் 15 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் பங்கேற்று ஆட்டம் பாட்டம் குடி கும்மாளம் என இருந்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சொகுசு விடுதிக்கு சீல்

சொகுசு விடுதிக்கு சீல்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நைட் பார்ட்டி கொண்டாட்டத்துக்கு தடை விதித்தனர். மேலும் கவிதா ஸ்ரீ உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சொகுசு விடுதிக்கும் சீல் வைத்தனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

நடிகை ஒருவர் இரவு நேர பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து போலீஸில் மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அனுமதி வழங்கப்படவில்லை

அனுமதி வழங்கப்படவில்லை

இருப்பினும் கேளிக்கை விடுதிகளில் இரவு நேர பார்ட்டிகள் போன்றவற்றுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதியின்றி பார்ட்டி நடத்திய நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X