ராதா புகாரை வாபஸ் பெற்றாலும், பைசூலை கைது செய்தே தீருவோம் - போலீஸ் உறுதி!

By Shankar

Police firm on arresting Faizul
சென்னை: நடிகை ராதா தன் புகார்களை வாபஸ் பெற்றாலும், பைசூலை கைது செய்யும் முடிவில் மாற்றமில்லை என்று சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது.

'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது செக்ஸ் மற்றும் ரூ 50 லட்சம் மோசடி புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குபதிவு செய்து பைசூலை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அதிலிருந்து தப்புவதற்காக 3 முறை முன் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவர் மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது.

இதன்பிறகும் பைசூலை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்துகிறார்கள் என்றும், அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றும் போலீசார் மீது ராதா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்நிலையில் ராதா யாரும் எதிர்பாராத வகையில் தனது புகார் மனுவை திடீரென வாபஸ் வாங்கினார். பைசூலுடன் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் புகார் மனுவை வாபஸ் பெற்றதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக ராதாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, பைசூல் எனது கணவர்தானே இதற்கு மேலும் அவரை ஓடி ஒளிய வைக்க நான் நினைக்கவில்லை என்று மட்டும் கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். இதன் பிறகு அவரை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.

பைசூல் மீது ராதா கொடுத்த புகாரை வாபஸ் பெற்றதுடன் இந்த விவகாரம் முடிந்து விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில் கூறும் போது, ராதாவின் புகார் மீது எப்ஐஆர் போட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் அவரை கைது செய்வோம் என்றும் கூறியுள்ளனர்.

ராதா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பைசூலுக்கு இன்னும் முன்ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவரை தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த வழக்கை பொறுத்தவரை எங்களது வேலை இன்னும் முடியவில்லை. ராதா நீதிமன்றம் மூலம்தான் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

புகார் மனுவை வாபஸ் பெற்ற பின்னர் ராதா பைசூலை சந்தித்து பேசியுள்ளார். 2 பேரும் தற்போது ஒன்றாகவே இருக்கின்றனர். எனவே அவரை வைத்து பைசூலை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே ராதா புகார் மனுவை வாபஸ் பெற்றதை காரணம் காட்டி பைசூல் இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X