twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்கை கழற்றி.. வழுக்கையைத் துடைத்து...மறுபடியும் மாட்டி...'குத்து' டாக்டர் 'பவர்' படுத்திய பாடு!

    By Sudha
    |

    மதுரை: பவர் ஸ்டார் சீனிவாசனை கஸ்டடியில் எடுத்துள்ள போலீஸார் அவரிடமிருந்து ஒரு தகவலையும் கறக்க முடியாமல் அவரது செய்கைகளால் கடுமையான அவஸ்தைக்குள்ளான சோகக் கதை வெளியே வந்துள்ளது.

    மிகப் பெரிய பவர் ஸ்டாராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, தனக்குத் தானே போஸ்டர் அடித்தும், வாழ்த்து கூறியும் தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கமான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருந்தவர் பவர்.

    தனது அயராத முயற்சியால், இவர் இருந்தால் போதும், படம் ஓஹோன்னு ஓடும் என்ற அதீத நம்பிக்கைக்கு தமிழ் சினிமாக்காரர்களை கொண்டு வந்து விட்டவர் பவர். ஆனால் இவரது நிலைமை என்ன இப்போது... ஒரு மோசடிக்காரராக மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறார் மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த பவர்.

    பொறந்தது சிம்மக்கல்..

    பொறந்தது சிம்மக்கல்..

    மதுரை சிம்மக்கல் தான் பவர்ஸ்டார் சீனிவாசனின் ஒரிஜினல் ஏரியா. இங்கிருந்துதான் இவர் சென்னைக்குப் படையெடுத்து வந்தார்.

    'குத்து' டாக்டர்...

    'குத்து' டாக்டர்...

    இவர் எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் அல்ல. மாறாக சீனாவில் சொல்லித் தரப்படும் அக்குபங்சர் படிப்பை தபால் மூலம் படித்து அதில் தேறியவராம். சென்னையில் கூட அக்குபஞ்சர் கிளினிக்கைதான் இவர் நடத்தி வருகிறார்.

    மதுரையில் விஜயா... சென்னையில் ஜூலி

    மதுரையில் விஜயா... சென்னையில் ஜூலி

    பவருக்கு மொத்தம் 2 மனைவிகள். மதுரையைச் சேர்ந்த விஜயா முதல் மனைவி. ஆனால் சென்னையில் இவர் வசித்து வருவது 2வது மனைவி ஜூலியுடன்.

    மகள் பெயரில் திரைப்படத் தயாரிப்பு

    மகள் பெயரில் திரைப்படத் தயாரிப்பு

    மகள் லத்திகா பெயரில் திரைப்படத் தயாரிப்பில் குதித்தவர் பவர். முதல் படம்தான் லத்திகா.

    கசப்பைக் கொடுத்த லட்டு

    கசப்பைக் கொடுத்த லட்டு

    கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் வருவதற்கு முன்பு வரை பெரிய ஸ்டாராகவில்லை பவர். ஆனால் லட்டு படம் அவருக்கு பெரிய பப்ளிசிட்டியைக் கொடுத்தது. கூடவே வில்லங்கங்களையும் கூட்டி வந்து விட்டது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் அவர் மீது மோசடிப் புகார்கள் கிளம்பின.

    இதுவரைக்கும் 12 கோடி மோசடி

    இதுவரைக்கும் 12 கோடி மோசடி

    இதுவரை பவர் மீது குவிந்துள்ள புகார்களின்படி மொத்தம் ரூ. 12 கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. வேலை வாங்கித் தருவது, பண இரட்டிப்பு, சினிமா சான்ஸ் தருவது என பல விதமான மோசடிகளில் பவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    போலீஸ் காவலில்

    போலீஸ் காவலில்

    5 நாள் போலீஸ் காவலில் பவர் ஸ்டாரை போலீஸாரை விசாரணைக்காக எடுத்தனர். அங்கு அவர்கள் பட்ட பாடு தனிக் கதையாக மாறியுள்ளது.

    எதுக்கெடுத்தாலும் சிப்பு

    எதுக்கெடுத்தாலும் சிப்பு

    பவர் ஸ்டாரிடம் என்ன கேள்வி கேட்டாலும் அவர் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாராம். மாறாக சிரித்ததபடி இருக்கிறாராம்.

    திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத்....

    திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத்....

    திரும்பத் திரும்பக் கேட்டாலும் பதில் சொல்வதில்லையாம். ஒரே சிப்புதானாம்....

    விக்கை கழற்றி.. வழுக்கையைத் துடைத்து...மறுபடியும் மாட்டி...

    விக்கை கழற்றி.. வழுக்கையைத் துடைத்து...மறுபடியும் மாட்டி...

    அவ்வப்போது தனது தலையைத் தழுவியபடி இருக்கும் விக்கை கழற்றி தலையை நன்றாக கர்ச்சீப்பால் நிதானமாக துடைத்து பின்னர் மறுபடியும் விக்கை மாட்டிக் கொண்டாராம் பவர்.

    மறுபடியும் கஸ்டடி கேட்க வேண்டியதுதானே...

    மறுபடியும் கஸ்டடி கேட்க வேண்டியதுதானே...

    போலீஸார் கஸ்டடி முடியப் போகுது ஏதாவது சொல்லுங்க பவர் என்று கேட்டால், ஏன் மறுபடியும் கஸ்டடி கேட்க வேண்டியதுதானே என்று சிரித்தாராம் பவர்.

    என்ன பண்ணலாம் இவரை...?

    என்ன பண்ணலாம் இவரை...?

    படத்தில் செய்யும் காமெடியை நிஜப் போலீஸாரிடம் செய்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசனால் நொந்து போயுள்ள போலீஸார் என்ன செய்யலாம் இவரை என்று யோசித்து வருகிறார்களாம்.

    English summary
    Police team which grilled actor Power Star Srinivasan for his frauds is frustrated after he refused to reply for any questions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X