twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேன்சரால் பாதிக்கப்பட்ட இயக்குநரை அவமதித்த விவகாரம்.. வீட்டிற்கே சென்று வருத்தம் தெரிவித்த போலீஸ்!

    |

    சென்னை: கேன்சரால் பாதிக்கப்பட்ட திரைப்பட இயக்குநரை இழிவுப்படுத்திய விவகாரம் தொடர்பாக போலீசார் அவரது வீட்டிற்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    திரைப்பட இயக்குநர் ரமணா சந்திரசேகர் நடிகர் விஜயை வைத்து திருமலை, ஆதி, உள்ளிட்ட படங்களையும் நடிகர் தனுஷை வைத்து சுள்ளான் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இயக்குநர் ரமணா கடந்த சில ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இயக்குநர் ரமணா போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் பேஸ் புக்கில் வேதனையுடன் தெரிவித்து இருந்தார். தான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தும் தள்ளி நின்னு பேசுடா.. எச்சில்பட்டு உன் நோய் எனக்கும் ஒட்டிக்கும் என்றும் கடுமையாக பேசினர்.

    "முதல்ல சினிமாவ காப்பாத்துங்க.. அப்புறம் அரசியலுக்கு போகலாம்".. ரஜினி, கமலை சீண்டிய பிரபல இயக்குனர்

    பலரும் கண்டனம்

    பலரும் கண்டனம்

    இதுகுறித்து இயக்குநர் ரமணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விலாவரியாக பதிவிட்டிருந்தார். இயக்குநர் ரமணாவை போலீசார் தரக்குறைவாக நடத்தியதற்கும் பேசியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ரமணாவின் பேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

    போலீஸ் வருத்தம்

    போலீஸ் வருத்தம்

    ஊடகங்களும் அதனை செய்தியாக ஒளிபரப்பின. இந்நிலையில் நேற்றைய சம்பவத்துக்காக காவல்துறை அதிகாரிகள் சிலர் இயக்குநர் ரமணாவின் வீட்டிற்கே சென்று வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

    கோடி நன்மை

    கோடி நன்மை

    இதுதொடர்பாக இயக்குநர் ரமணா சந்திரசேகர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது, நெஞ்சார்ந்த நன்றிகள்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவை பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும், துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்... அதன் பலனாக,

    வருத்தம் தெரிவித்த அதிகாரிகள்

    வருத்தம் தெரிவித்த அதிகாரிகள்

    இன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்பு செய்தது. அதன் விளைவாக இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் திரு. கிருஷ்ணமூர்த்தி, திருமதி K. ஷோபனா இருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள்.

    நெஞ்சார்ந்த நன்றிகள்

    மேலும்,திரு. பெரோஸ் கான் அப்துல்லா என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார். இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு இயக்குநர் ரமணா சந்திரசேகர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருக்கிறார்.

    English summary
    Police has met Director Ramana Chandrasekar at his home and expressed regret over the incident.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X