ஸ்ருதி ஹாஸனைத் தாக்கியவரின் அடையாளம் தெரிந்தது!

By Shankar

Police identifies stalker who attacked Shruti
மும்பை: ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கிய நபர் யார் என்ற அடையாளம் தெரிந்துவிட்டது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.

மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது.

இந்த சம்பவத்தினால் அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன் அந்த வீட்டில் தங்காமல், தன் தோழி வீட்டில் இருக்கிறார்.

முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஸ்ருதிஹாசன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு வரும் வெளியாட்கள், பாதுகாவலர் அறையில் இருக்கும் நோட்டில் தங்களது பெயர் விவரங்களை எழுதி வைப்பது வழக்கம்.அந்த நோட்டில் பார்த்த போது சுருதிஹாசனை பார்க்க வந்தது அசோக் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர் அசோக் ஜெயின் என்று தனது பெயரை பதிவு செய்து இருந்தவன் தெரியவந்தது. அந்த நபரை அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் அடையாளம் காட்டினர்.

மேலும் அந்த நபர் சிறிது நாட்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு அரங்குகளிலும் ஸ்ருதியைத் தொட முயற்சித்து விரட்டியடிக்கப்பட்டுள்ளான். படப்பிடிப்பு குழுவினரிடம் கண்காணிப்பு கேமரா வீடியோவைக் காட்டியபோது, அவர்களும் அந்த வாலிபரை அடையாளம் காட்டினர்.

இதைத் தொடர்ந்து அந்த நபர் மீது அத்துமீறல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தேட ஆரம்பித்துள்ளனர் போலீசார்.

இதற்கிடையே ஸ்ருதிஹாஸன் மீதான இந்தத் தாக்குதல் குறித்து அதிர வைக்கும் வேறு சில தகவல்களை மும்பை மீடியா வெளியிட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X