சுஷாந்த் உங்களிடம் ஏதாவது சொன்னாரா? முன்னாள் காதலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தும் போலீஸ்!
சென்னை: நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது முன்னாள் காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
நடிகர் சுஷாந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது மன அழுத்தத்திற்கு பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் காரணம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாரிசு ஆதிக்கம்
சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல இடங்களில் சுஷாந்தின் ரசிகர்கள், அவர்களின் கொடும்பாவியை எரித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பாலிவுட்டில் வாரிசு ஆதிக்கம் செலுத்தும் பிரபலங்களை விளாசி வருகின்றனர்.

காதலியிடம் விசாரணை
சுஷாந்த் மரணத்திற்கு நீதிக்கேட்டு நெட்டிசன்கள் பல்வேறு ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர். சுஷாந்தின் தற்கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகையுடன் காதல்
அங்கிதாவுடனான 6 ஆண்டு காதல் முறிந்த பிறகு, நடிகர் சுஷாந்த் பாலிவுட் நடிகையான ரியா சக்ரபர்த்தியுடன் காதல் உறவில் இருந்தார். அவர்கள் இருவரும் டேட்டிங் சென்ற போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. சுஷாந்த் மன அழுத்தத்தின் தொடக்க நிலையில் இருந்த போதெல்லாம் என ரியா அவருடன்தான் இருந்துள்ளார்.

பிரிந்து சென்ற காதலி
ஆனால் அவருக்கு மன அழுத்தம் அதிகமான போதுதான், தன்னுடைய நலத்தை கருத்தில் கொண்டு அவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் மன அழுத்தம் ஒரு பக்கம் அதிகரிக்க, 6 மாதங்களில் அடுத்தடுத்து கமிட்டான 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் மன அழுத்தம் அதிகமாகி தனிமையில் இருந்த சுஷாந்த் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

வெள்ளை உடையில்
இந்நிலையில் மும்பையில் உள்ள காப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சுஷாந்த் சிங் உடல் இருந்த போது நடிகை ரியா அங்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அவர் வெள்ளை உடையில் முகத்தை மூடிக்கொண்டு வந்ததும் அங்கிருந்து அவர் கண்ணீரோடு காரில் ஏறிச் சென்றதும் வைரலானது.

என்ன சொன்னார்?
இதனை தொடர்ந்து நடிகை ரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்ன, உங்களிடம் சுஷாந்த் சிங் என்ன சொன்னார் என்பது குறித்து ரியாவிடம் போலீசார் நடத்தி வருகின்றனர். மேலும் அவர் உடலில் என்ன பிரச்சனை இருந்தது, மன ரீதியாக என்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்றும் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











