Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?
சென்னை : வாய்தா பட நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை வழக்கில் காதலனிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜெஸிகா பவுலின் என்கிற தீபா சென்னை விருகம்பாக்கத்தில் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த வாரம் வீட்டின் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சிற்றம்பலம்
நித்யா
மேனனின்
நடிப்பு
..வசந்த்,
சிம்புதேவன்,
வெங்கட்
பிரபு..ஒரு
மனதாக
பாராட்டு

நடிகை பவுலின்
இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் வாய்தா. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஜெஸிகா பவுலின். 29 வயதான இவர், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், தற்கொலைக்கு முன்பு ஜெஸிகா பவுலின் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்தேன், அந்த காதல் நிறைவேறாததால் உலகத்தைவிட்டு செல்கிறேன் என்று எழுதியிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், காதலன் யார் என விசாரணை நடத்தினர்.

பிரபாகரனிடம் விசாரணை
தற்கொலை செய்துகொண்ட பவுலின் ஜெசிகாவின் ஐபோனை காணவில்லை என அவரது சகோதரர் கூறியிருந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து முதல் ஆளாக தகவல் கொடுத்த பிரபாகரன் வீட்டின் கதவை உடைத்து ஐபோனை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரபாகரனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

சிக்கியது ஐபோன்
நடிகை தற்கொலை தொடர்பாக சிராஜுதீன் தெரிவித்த தகவலின் அடிப்படையில், தான் பவுலின் வீட்டிற்கு வந்ததாகவும் விசாரணையில் பிரபாகரன் தெரிவித்தார். இதையடுத்து ஐபோனை மீட்ட போலீசார், செல்போன்களில் உள்ள தடையங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய தடயவியல் துறைக்கு செல்போன் அனுப்பபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு தலைக்காதலா?
நடிகை ஜெசிகா பவுலின் தற்கொலை விவகாரம் தொடர்பாக காதலன் சிராஜுதினிடம் போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தன்னை பவுலின் ஒருதலையாக காதலித்ததாக சிராஜுதின் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை அழைத்தும் சிராஜுதீன் விசாரணையை பல்வேறு காரணங்களைக் கூறி தட்டிக் கழித்து வந்த நிலையில், கோயம்பேடு காவல்நிலையத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். சிராஜுதீன் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.