சர்ச்சை இயக்குநரிடம் 3 மணி நேரம் விசாரணை... இன்று கைது செய்யப்பட வாய்ப்பு!

By Vignesh Selvaraj

Recommended Video

ஆபாசப் பட நடிகை மியா மால்கோவை வைத்து ராம் கோபால் வர்மா இயக்கிய ஒரு படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஐதராபாத் : சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா படம் எடுத்தாலும் பரபரப்புதான், பேசினாலும் பரபரப்புதான். அவர் தற்போது 'God sex and truth' என்ற ஒரு படம் இயக்கி தயாரித்தார்.

இந்தப் படத்தில் பிரபல ஆபாசப் பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.

இந்தப் படத்திற்கு எழுந்த பலத்த எதிர்ப்பால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் 'God sex and truth' படம் பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி தெலுங்கானா மாநிலத்தில் பல பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் படம் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராம்கோபால் வர்மா பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாகவும் கூறப்படுகிறது.

போராட்டம் நடத்திய பெண்கள்

போராட்டம் நடத்திய பெண்கள்


இதனால் பெண்களின் போராட்டம் இன்னும் வலுவடைந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 40 காவல் நிலையங்களில் ராம்கோபால் வர்மா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ராம்கோபால் வர்மா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்கோபால் வர்மா ஆஜர்

ராம்கோபால் வர்மா ஆஜர்

இதைத் தொடர்ந்து ராம்கோபால் வர்மா போலீஸ் முன்பு ஆஜராகி தனது விளக்கத்தை தரவேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று ஐதராபாத் சென்டிரல் க்ரைம் போலீசார் முன்பு ராம்கோபால் வர்மா ஆஜரானார்.

மொபைல், லேப்டாப் பறிமுதல்

மொபைல், லேப்டாப் பறிமுதல்

ராம்கோபால் வர்மாவிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடமிருந்த மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் இன்று (19-ம் தேதி) ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

கைதாக வாய்ப்பு

கைதாக வாய்ப்பு

நாளை விசாரணை முடிந்த பிறகு ராம்கோபால் வர்மாக கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சர்ச்சை இயக்குநருக்கு இது போதாத காலம் என விவாதித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X