அஜித் ரசிகர்கள் மீது தடியடி.. சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு!

சென்னை விமானநிலையத்தில் அஜித் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

அஜித் ரசிகர்கள் மீது தடியடி - வைரல் வீடியோ

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் முண்டியடித்து சென்றதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற ஆளில்லா விமானங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பின் நடிகர் அஜித், நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முற்பட்டபோது, அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்தனர்.

தன்னை நோக்கி ரசிகர்கள் வருவதை கவனித்த அஜித், வேகமாக சென்று காரில் ஏற முயன்றார்.

ரசிகர்கள் கூட்டம்:

ரசிகர்கள் கூட்டம்:

ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரால் காரில் ஏற முடியவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். ஆனால் அதற்குள் அஜித் விமான நிலையத்தில் உள்ள செய்தி, அங்கு தீயாய் பரவியது.

மத்திய தொழிற்படை போலீஸ்:

மத்திய தொழிற்படை போலீஸ்:

இதனால் ரசிகர்கள், விமான பயணிகளை வரவேற்க வந்தவர்கள் என பலரும் விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதையடுத்து, அவர்களை மத்திய தொழிற்படை போலீசார் தடுத்து நிறுத்தினர். கூடிய கூட்டத்தையும் அப்புறப்படுத்தினார்கள்.

தடியடி:

தடியடி:

பின்னர் விமான நிலையத்தின் மற்றொரு பகுதியில் அஜித் வெளியே வந்தபோது ரசிகர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முண்டியடித்து சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் பாதுகாப்பாக அஜித் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.

வைரல்:

வைரல்:

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஜித் தனது குடும்பத்துடன் கோவா செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோதும், சரி திரும்பி வந்தபோதும் சரி, இதேபோல் அவரைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். சிலருடன் அஜித்தும் செல்பி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X