பெங்களூர்: ரஜினியைக் காண குவிந்த மக்கள்.. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் தடியடி

பெங்களூர்: பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் பார்க்க குவிந்த அவரது ரசிகர்கள் மீது கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக லேசான தடியடி நடத்தினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்.

ரஜினி தான் பிறந்த ஊரான பெங்களூருக்கு அடிக்கடி வந்து செல்வது உண்டு. அங்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில், வழக்கம்போல், ஓய்வு எடுப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் வந்திருந்தார் ரஜினி.

நேற்று அவரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன்னர் ரசிகர்கள் குவிந்தனர். அக்கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.

ஓய்வு....

ஓய்வு....

கடந்த 5 நாட்களாக பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி அவர் ஓய்வெடுத்து வந்தார்.

தரிசனம் கிடைக்காதா....

தரிசனம் கிடைக்காதா....

ரஜினியின் வருகை விவரம் நேற்று காலை அவரது ரசிகர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, நேற்று காலை அவரை நேரில் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அவரது வீட்டு முன் திரண்டனர்.

பறக்கும் முத்தம்....

பறக்கும் முத்தம்....

ரசிகர்களின் வருகையைக் அறிந்த ரஜினி, வீட்டு மாடியில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். பின்னர் கை கூப்பி வணங்கி புன்முறுவல் உதிர்த்தார். கோஷமிட்ட ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார் ரஜினி.

தலைவா....

தலைவா....

ரஜினியை நேரில் பார்த்த உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் கோஷம் எழுப்பினார்கள்.

தடியடி....

தடியடி....

ஒரு கட்டத்தில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மந்திராலாயா....

மந்திராலாயா....

பின்னர் ரஜினி போலீஸ் உதவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் மந்திராலயா சென்று விட்டு, சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X