சர்கார் டிக்கெட் பிரச்சனையால் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.. திரையரங்கில் பதற்றம்
காஞ்சிபுரம்: திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் சர்கார் திரைப்படம் தீபாவளி ட்ரீட்டாக நாளை இந்தியாவில் ரிலீஸாகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக திரையரங்கில் கூட்டம் அலை மோதுகிறது. இன்று காலை காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி விக்னேஷ்வரா திரையரங்கில் முன்பதிவுக்காக விஜய் ரசிகர்கள் திரண்டனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. பிறகு மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
ஆசையாய் டிக்கெட் எடுக்க வந்த ரசிகர்கள் போலீசாரின் தடியடியிலிருந்து தப்பிக்க அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Click it and Unblock the Notifications











