twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேபாளத்தில் சுற்றி வளைக்கப்பட்டாரா வேந்தர் மூவீஸ் மதன்?

    By Shankar
    |

    டெல்லி: தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி தலைமறைவாகிவிட்ட வேந்தர் மூவீஸ் மதனை, நேபாளத்தில் போலீசார் சுற்றி வளைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வேந்தர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மதன் மாயமாகி ஒரு மாதம் ஆகிவிட்டது. அவரை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் கொடுத்த புகார் அடிப்படையில் ஒரு வழக்கும், மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கித்தருவதாக ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக 103 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த 2 வழக்குகளையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    4 தனி படைகள்

    4 தனி படைகள்

    கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். மதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், வாரணாசி மற்றும் நெல்லை ஆகிய நகரங்களிலும் முகாமிட்டு தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    கண்டுபிடிக்க முடியவில்லை

    கண்டுபிடிக்க முடியவில்லை

    மதன் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற மதன் இதுவரை உயிரோடு இருப்பதாகவே தெரிய வந்துள்ளது. மதனோடு அவரது உதவியாளர்கள் குணா, சுதிர் ஆகியோரும் காணாமல் போய்விட்டனர். அவர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

    நேபாளத்தில்

    நேபாளத்தில்

    தலைமறைவான மதன் நேபாள நாட்டில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவல் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. எனவே நேபாளத்திற்கும் செல்ல தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். நேபாள போலீசின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.

    விசாரணை

    விசாரணை

    மதன் பாயும் புலி, தில்லுமுல்லு, புலிப் பார்வை போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். லிங்கா உள்பட 10 படங்களுக்கு வினியோகஸ்தராக செயல்பட்டுள்ளார். அவர் மாயமான சமயத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற புதிய படத்தை தயாரித்து வந்தார்.

    இந்தப் படங்களில் தொடர்புடைய சினிமா பிரமுகர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகள், சினிமா வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட நிறைய பேரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.

    கடன்

    கடன்

    பல தயாரிப்பாளர்கள், பைனான்சியர்களிடம் அவர் ரூ.35 கோடி வரை கடனும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது பெயரிலும், தனது 2 மனைவிகள் மற்றும் பெற்றோர் பெயரிலும் என்னென்ன சொத்துகள் வாங்கியுள்ளார் என்ற பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.

    கூட்டாளி கைது

    கூட்டாளி கைது

    மதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கில் முதல் முறையாக மதனின் நெருங்கிய கூட்டாளியான விஜயபாண்டி (வயது 31) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

    என்ஜினீயரான விஜயபாண்டி சென்னை குரோம்பேட்டையில் வசித்துவந்தார். மருத்துவக் கல்லூரி சீட்டுகளுக்காக பணம் வாங்கி கொடுக்கும் ஏஜெண்டாக மதனிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரிகளில் சீட் வாங்கித்தருவதாக 16 பேரிடம் ரூ.10 கோடி அளவுக்கு பணம் வசூலித்துள்ளார். ஆனால் அந்த 16 பேருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் சீட் வாங்கித்தரப்படவில்லை. அவர்களிடம் வசூலித்த ரூ.10 கோடி பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது.

    நேபாளத்தில் சுற்றி வளைப்பு?

    நேபாளத்தில் சுற்றி வளைப்பு?

    இதற்கிடையே, தலைமறைவான மதன் நேபாளத்தில் இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், அவரை போலீசார் சுற்றி வளைத்துவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டால் நிறைய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Reports suggested that the police have nearing Vendhar Movies Madhan's hideout area in Nepal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X