வெறித்தன 'மெர்சல்' ஃபீவர் -ரசிகர்கள் மத்தியில் மேஜிக் செய்த கேரள போலீஸ்காரர்!
கொச்சின் : தமிழ் சினிமாவில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் விஷயம் 'மெர்சல்' தான். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படம் தீபாவளிக்கு அதிரடி சரவெடியாக வெளியாக இருக்கிறது.
'மெர்சல்' படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் பெறாததாக சர்ச்சை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும், 'மெர்சல்' டிக்கெட் ரிசர்வேசன் தொடங்கப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட் பெற்று வருகின்றனர்.

ரசிகர்கள் பலரும் தங்களது அபிமானமான விஜய்யின் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளனர். இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடிக்கிறார். அவற்றில் மேஜிக் கலைஞர் வேடமும் ஒன்று.
இந்த நிலையில் கேரளாவில் ஒரு போலீஸ் அதிகாரி விஜய் ரசிகர்கள் மத்தியில் மேஜிக் ஒன்றை செய்து காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. மெர்சல் ப்ரொமோஷனுக்காகக் குவிந்த ரசிகர்கள் மத்தியில், போலீஸ்காரர் பொருளை மறைய வைக்கும் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார்.
அவரது மேஜிக்கை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்தோடு கத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். கேரளாவில் நல்ல மார்க்கெட் கொண்ட விஜய், 'மெர்சல்' படத்தின் மூலம் அதை மீண்டும் நிரூபிப்பார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











