அய்யோ போலீஸ் ஸ்டேஷன் மட்டும் வந்துடாதீங்க.. சிரஞ்சீவியிடம் ரெக்வஸ்ட்.. அல்லு அர்ஜுன் வீட்டில் ஆஜர்!
சென்னை: டோலிவுட்டின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்ற போது கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக இந்த கைது நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கைது செய்தால் பெயில் கிடைக்க 2 நாட்கள் ஆகும் என்கிற உள்நோக்கத்துடன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டாரா? புஷ்பா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் அல்லு அர்ஜுனின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு இப்படியொரு ஆக்ஷன் அவர் மீது நடத்தப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித்துவிட்டன.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லு அர்ஜுனை பார்க்க போலீஸ் ஸ்டேஷன் வரப்போவதாக சொல்ல காவல்துறை அதிகாரி நீங்க இப்போ வரவேண்டாம் என்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அல்லு அர்ஜுன் வீட்டில் சிரஞ்சீவி: மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை அறிந்த உடனே அவரை காவல் நிலையத்துக்கே சென்று சந்திக்க முடிவு செய்துள்ளார். ஆனால், காவல் துறை அதிகாரிகள் ரெக்வஸ்ட் செய்ததன் பேரில் அங்கே செல்லாமல், அல்லு அர்ஜுன் வீட்டுக்குச் சென்று சிரஞ்சீவி ஆறுதல் கூறியுள்ளார்.
காவல் நிலையத்தில் தில் ராஜு: தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு அல்லு அர்ஜுனை காவல் நிலையத்துக்கே சென்று சந்தித்துள்ளார். அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செக்கப் செய்யப்பட்ட நிலையில், மதியம் நாம்பலி குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்லு அர்ஜுனை திங்கட்கிழமை வரை கைது செய்யக் கூடாது என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
போலீஸார் குவிப்பு: அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கைக்கு பிறகு தெலங்கானாவில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. நாம்பலி குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லு அர்ஜுன் வரவுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி ஏகப்பட்ட போலீஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது டவுட்டு தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











