சிம்புக்காக களத்தில் குதித்த டிஆர்… பத்து தல படத்தின் தரமான அப்டேட்!
சென்னை : சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை சிம்புவின் தந்தை டிராஜேந்தர் கவனித்து வருகிறார்.
கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள பத்து தல படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதில், பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பத்து தல
சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றுத்தந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்திருந்தார். கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படப்பிடிப்பு தாமதம் ஆனதால், மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நினைவிருக்கா?
இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசைமைத்துள்ளார். பத்து தல படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் மிரட்டலான போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. இதையடுத்து,நேற்று, பத்து தல படத்தின் இரண்டாம் பாடலான நினைவிருக்கா? என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர்.

பிரம்மாண்ட இசைவெளியீட்டுவிழா
இந்நிலையில், பத்து தல திரைப்படத்தின் பிரம்மாண்ட இசைவெளியீட்டு வரும் 18ந் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிம்புவின் அப்பா டிஆர் கவனித்து வருகிறார். இதற்காக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து டி ராஜேந்தர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

சென்னை திரும்பும் சிம்பு
பத்து தல படப்பிடிப்பு முடிந்த கையோடு தாய்லாந்து சென்ற சிம்பு, அங்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. பத்து தல டப்பிங்கிற்காக படக்குழுவை அங்கு வர சொன்னதாகவும் ஒரு தகவல் பரவி உள்ளது. தற்போது சிம்பு பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை சென்னை வர உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











