வனிதாவுடன் சமரசமே கிடையாது.. மறுத்த சூர்யாதேவி.. போலீஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

சென்னை: வனிதா மற்றும் சூர்யா தேவி இடையே போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Recommended Video

Vanitha Vijaykumar முதல் சாந்தமான நேர்காணல்

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பீட்டர் பாலின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்ததாக குற்றம் சாட்டினார்.

பலரும் கருத்து

பலரும் கருத்து

தனக்கு தன்னுடைய கணவர் வேண்டும் என்று வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வனிதா, அடுத்தவர் கணவரை பறித்துக்கொண்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

விளாசிய சூர்யா தேவி

விளாசிய சூர்யா தேவி

அந்த வகையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் யூட்யூப் பிரபலமான சூர்யா தேவி ஆகியோரும் வனிதாவின் மூன்றாவது திருமணம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர். சூர்யா தேவி யூட்யூப்பில் வனிதா, ஆபாச வார்த்தைகளால் விமர்சித்தார். கையில் துடைப்பக்கட்டையுடன் எல்லாம் வீடியோ வெளியிட்டார்.

கஞ்சா விற்கிறார்

கஞ்சா விற்கிறார்

இதனால் கடுப்பான வனிதா, இரண்டு நாட்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் சூர்யா தேவி மற்றும் ரவீந்திரன் மீது புகார் அளித்தார். அப்போது பேசிய வனிதாவும் அவரது வழக்கறிஞர் சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றனர். மேலும் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் பல தொழில்களை செய்கிறார் என்றும் கூறினர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனை தொடர்ந்து சூர்யா தேவி வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னை அவதூறாக பேசியதாகவும் தனது மனதை புண்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

சூர்யா தேவி மறுப்பு

சூர்யா தேவி மறுப்பு

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை இருவரையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர். 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் இருவரையும் சமாதானமாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் சமாதானமாக செல்ல சூர்யாதேவி மறுத்ததாக கூறப்படுகிறது.

மன்னிப்பு கேட்கவில்லை

மன்னிப்பு கேட்கவில்லை

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா விஜயகுமார், தன் மீது அவதூறான கருத்துக்களை பகிர்ந்த சூர்யா தேவி, போலீசார் அறிவுறுத்தியும் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை என்றும் இந்த விவகாரத்தில் தான் சமரசமாக செல்லவே எண்ணியதாகவும் குறிப்பிட்டார்.

பேச்சு வார்த்தை தோல்வி

பேச்சு வார்த்தை தோல்வி

தனிப்பட்ட ஒருவர் குறித்து கீழ்த்தரமான கருத்துக்களை கூறுவதை ஏற்கமுடியாது என்ற வனிதா இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த போலீசார் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் இருவருக்கும் இடையிலான சமூக வலைதள மோதல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X