விஜய் ஆண்டனியின் மகள் மீராவுக்கு ஓராண்டாக சிகிச்சை.. மருத்துவரிடம் போலீஸ் விசாரணை!

சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீராவுக்கு ஓராண்டாக சிகிச்சை அளித்த மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 16 வயதில் மீரா என்ற மகள் இருந்த நிலையில் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

Police probe the doctor who treated Vijay Antonys daughter Meera

தற்கொலைக்கான காரணம்: அவரது இறப்பு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்தூறு ஆய்வு செய்யப்பட்டு டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனி வீட்டில் இறுதி சடங்குக்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும், மகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் கேட்டு தெரிந்து கொண்டனர்.

முதற்கட்ட விசாரணை: சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மீரா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பள்ளி தோழிகளிடமும், வகுப்பு ஆசிரியரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓராண்டாக சிகிச்சை: மேலும் மீராவுக்கு கடந்த ஓராண்டாக காவேரி மருத்துவமனை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். இதனால், அந்த மருத்துவரிடம் போலீசார், அவர் எதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார், அவருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

ஆறுதல் கூறும் பிரபலங்கள்: ஆசை ஆசையாக வளர்ந்த செல்ல மகளை பரிகொடுத்துவிட்டு சொல்லமுடியாத தீராத துயரத்தில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X