நடிகை வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நடிகை வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: நடிகை வனிதா விஜயகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீட்டில், அவரது மகள் வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு நடத்தினார். படப்பிடிப்புக்கு பிறகும் அவர் அந்த வீட்டை காலி செய்யாததால் மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் விஜயகுமார் புகார் செய்தார்.

இதையடுத்து, போலீசார் தலையிட்டு, நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications











