Vijayakanth: கேப்டனுக்கு அரசு மரியாதை செய்ய தயாரான போலீஸ்.. 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம்!
சென்னை: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் காலை 6 மணியளவில் உயிரிழந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அதிகமான ரசிகர்கள், பிரபலங்கள், தொண்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என கூட்டம் அதிகரித்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதையடுத்து அவரது உடல் இன்று அதிகாலை 4 மணியளவில் அனைவரும் அஞ்சலி செலுத்தும்வகையில் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக தேமுதிக அலுவலகம் நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்று வருகின்றனர். வாகனத்தில் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மகன்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்த நிலையில் சாலையின் இருமருங்கிலும் இருந்த மக்கள் வேதனையுடன் அழுததை பார்க்க முடிந்தது. விஜயகாந்தின் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

விஜயகாந்த் மறைவு: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான நிலையில் இருந்தபோதிலும் அவர் நடமாடிக் கொண்டிருக்கிறார் என்ற நினைப்பு மட்டுமே அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் கேப்டன் நம்முடன் இல்லை என்ற நினைப்பே அவர்களை கதிகலங்க செய்துள்ளது. மறைந்த முள்ளாள் முதல்வர் எம்ஜிஆருக்கு நிகரான பாசத்தையும் பரிவையும் அவரது தொண்டர்கள் விஜயகாந்த் மீது வைத்திருந்தது அவரது மறைவில் வெளிப்பட்டுள்ளது.
கருப்பு எம்ஜிஆர்: கருப்பு எம்ஜிஆர், புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று பல்வேறு வார்த்தைகளில் விஜயகாந்தை கொண்டாடி வந்தனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் கடைசியாக அவரது முகத்தை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் நேற்றைய தினம் தேமுதிக அலுவலகத்திலும் இன்றைய தினம் தீவுத்திடலிலும் குழுமியதை பார்க்க முடிநத்து. மேலும் தற்போது விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திலும் வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் கதறி அழுததையும் பார்க்க முடிகிறது. ஒருவரது இறப்பே அவரது வாழும் காலத்தில் அவரது சிறப்பான நடவடிக்கையை வெளிப்படுத்தும் என்ற வார்த்தைகள் விஜயகாந்தின் மறைவில் எதிரொலித்துள்ளது.

அரசு மரியாதையுடன் அடக்கம்: விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் தற்போது போலீசார் தயாராகி வருகின்றனர்.விஜயகாந்தின் இறுதி சடங்கின்போது 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக தற்போது போலீசார் தேமுதிக அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர். முனனதாக, அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடமும் தயார்நிலையில் உள்ளது. தான் வாழும் காலத்தில் அனைவரது பசியை போக்கிய விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மக்களின் பசியை தன்னார்வலர்கள் போக்கியதையும் பார்க்க முடிந்தது.
மக்களின் எதிர்பார்ப்பு: திரைப்படம் என்ன ஊடகம் மூலமாக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் விஜயகாந்த் என்ற போதிலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே விஜயகாந்தின் தற்போதைய இந்த கண்ணீர் அஞ்சலி சாத்தியமாகியுள்ளது. கருப்பு எம்ஜிஆராக, எம்ஜிஆர் பாதையிலேயே நடைபோட்டவர் விஜயகாந்த், அரசியலிலும் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், உடல்நல பாதிப்பால் அவர் அவதிப்படாமல் இருந்திருந்தால் தமிழகத்திற்கு மேலும் சிறப்பான அரசியல் தலைவராக அவர் இருந்திருப்பார் என்பதே மக்களின் நம்பிக்கை.
தீவிர பாதுகாப்பு: விஜயகாந்த் மீண்டும் வருவார், மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள், தொண்டர்கள் காத்திருந்த நிலையில், உடல்நல பாதிப்பிலேயே இருந்து அப்படியே இறந்தும் போனார் என்பதுதான் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத உண்மையாக மாறியுள்ளது. ஆனாலும் தங்களின் விருப்பத்திற்குரிய தலைவனை இறுதியாக பார்க்கும் ரசிகர்களின் முனைப்பு காரணமாகவே தற்போது அவரது உடல் வைக்கப்பட்ட தேமுதிக அலுவலகம், தீவுத்திடல் மற்போது தற்போது இறுதி ஊர்வலத்தின்போது கூடிய கூட்டம் ஆகியவை உள்ளன. இன்னும் சில மணிநேரங்களில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கவனத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











