சுஷாந்த் சிங்கின் 5 டைரிகள்.. அதிரடியாக கைப்பற்றிய போலீஸ்.. கிலியில் பாலிவுட்டின் பெரும் தலைகள்!

சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டில் இருந்து போலீசார் 5 டைரிகளை கைப்பற்றியுள்ளனர்.

Recommended Video

Sushant Singh மரணத்திற்கு இது தான் காரணம் | Kangana Ranaut with Evidence

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

கடந்த ஞாயிற்று கிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வீட்டில் ஆட்கள்

வீட்டில் ஆட்கள்

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை தூங்கி எழுந்த சுஷாந்த் சிங், பின்னர் ஜூஸ் குடித்துவிட்டு மீண்டும் தூங்கப் போவதாக சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்றுள்ளார். வீட்டில் மூன்று பணியாட்கள் மற்றும் சுஷாந்தின் நண்பர் ஒருவர் என நான்கு பேர் இருந்துள்ளனர்.

சத்தமே இல்லை

சத்தமே இல்லை

மதியம் என்ன சமைக்க வேண்டும் என கேட்பதற்காக பணியாட்கள் அவரது அறை கதவை தட்டினர். அப்போது அறைக்குள் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள், சுஷாந்தின் சகோதரிக்கு தகவல் தெரிவித்ததோடு கதவை உடைத்து பார்த்தனர்.

மூச்சு திணறலால்..

மூச்சு திணறலால்..

அப்போது சுஷாந்த் தூக்கில் தொங்கியப்படி சடலாமாக இருந்துள்ளார். இந்நிலையில் அதிக மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. பிரேத பரிசோதனையில் சுஷாந்த் தூக்கில் தொங்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறலால் உயிரிழந்ததாக தெரிய வந்தது.

பார்ட்டிகளுக்கு அழைக்காமல்..

பார்ட்டிகளுக்கு அழைக்காமல்..

சுஷாந்தின் மரணத்திற்கு அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது. பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல்தான் அவரது மன அழுத்தம் மற்றும் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் எந்த பார்ட்டிக்கும் அவரை அழைக்காமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.

பாலிவுட் ஏற்க மறுக்கிறது

பாலிவுட் ஏற்க மறுக்கிறது

மேலும் அடுத்தடுத்து அவர் ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பலமுறை தனது பேட்டிகளில் தன்னை ஏன் பாலிவுட் ஏற்க மறுக்கிறது என கேட்டிருக்கிறார் சுஷாந்த். மேலும் தனக்கென சினிமா பேக்ரவுண்டு இல்லை என்றும் மக்கள் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இந்நிலையில் முக்கிய பிரபலங்கள்தான் அவரது மரணத்திற்கு காரணம் என சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்களை சாடி சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

5 டைரிகள் கைப்பற்றல்

5 டைரிகள் கைப்பற்றல்

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட அவரது பாந்த்ரா வீட்டில் இருந்து அவரது ஐந்து டைரிகளை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயம் அந்த டைரியில் சுஷாந்த் மரணத்திற்கும் மன அழுத்தத்திற்குமான காரணம் இருக்கும் என கூறப்படுகிறது.

பெருந்தலைகள் கிலி

பெருந்தலைகள் கிலி

போலீசாரும் அவரது டைரியின் மூலம் ஏதாவது துப்பு துலங்குமா என ஆய்வு செய்து வருகின்றனர். சுஷாந்தின் ஐந்து டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் பாலிவுட்டின் பல பிரபலங்கள் அந்த டைரியில் தங்களைப் பற்றி ஏதாவது தகவல் இருக்குமோ என கிலியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X