சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி 4 முறை பாலியல் வன்கொடுமை.. தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்!
கொச்சி: சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் மாடல் கொடுத்த புகாரை அடுத்து, பிரபல தயாரிப்பாளர் தலைமறைவாகி உள்ளார்.
சினிமாவில் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று பல நடிகைகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை பல நடிகைகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது சினிமாவில் சகஜம் என்றும் தெரிவிக்கின்றனர்.

எதிர்கொண்டோம்
அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் வாய்ப்புகள் கிடைக்காது என்றும் ஒரு சில நடிகைகள் மட்டுமே இந்தப் பிரச்னைகளில் இருந்து தப்புவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட தெலுங்கு ஹீரோயின் தேஜஸ்வி இதுபற்றி பரபரப்பு புகார் கூறியிருந்தார். இப்போது முன்னணியில் இருக்கும் சில நடிகைகள், தாங்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

22 வயது மாடல்
இந்நிலையில் பிரபல மலையாள படத் தயாரிப்பாளர் ஆல்வின் அந்தோணி மீது 22 வயது மாடல் ஒருவர், பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆல்வின் அந்தோணி, மலையாளத்தில் முன்னணி தயாரிப்பாளர். தனியாகவும் சிலருடன் இணைந்தும் பல படங்களை அவர் தயாரித்துள்ளார்.

அமர் அக்பர் அந்தோணி
குஞ்சாக்கோ போபன், நிமிஷா சஞ்சயன் நடித்த மாங்கல்யம் தந்துனானே, பிபின் ஜார்ஜ், பிரக்யா மார்டின் நடித்த ஒரு பழைய பாம்ப் கதா, ஜெயராம், அனுஶ்ரீ நடித்த தெய்வம் கைதொழாம் கே.குமார் அகனம், பிருத்விராஜ், ஜெயசூர்யா நடித்த அமர் அக்பர் அந்தோணி, நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ஓம் சாந்தி ஓசானா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
Recommended Video

4 முறை வன்கொடுமை
இவரிடம், அந்த 22 வயது மாடல் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டுள்ளார். தருவதாகக் கூறிய ஆல்வின், அந்த மாடலை பாலியல் வன்கொடுமை செய்தாராம். கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மார்ச் மாதம் வரை நான்கு முறை தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாடல் புகாரில் கூறியுள்ளார். புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக சர்கிள் இன்ஸ்பெக்டர் அனீஸ் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஆல்வின் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











