twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீரா மிதுன் எங்கே? போலீஸுக்கே தண்ணிகாட்டும் சாமர்த்தியம்... இன்னும் கண்டுபிடிக்க முடியலையாம்

    |

    சென்னை: நடிகை மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்தக் கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரொம்பவே பிரபலமானார்.

    இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

     அசிங்கப்பட்ட அசல் கோளார்..நடத்தை சரியில்லையே..என்று சிக்குவாரோ? அசிங்கப்பட்ட அசல் கோளார்..நடத்தை சரியில்லையே..என்று சிக்குவாரோ?

    சர்ச்சையில் மீரா மிதுன்

    சர்ச்சையில் மீரா மிதுன்

    மாடலிங் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த மீரா மிதுன், '8 தோட்டாக்கள்' விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'தானா சேர்ந்தக் கூட்டம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமான அவர், அதே வேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கினார். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துடன் வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். இதனால் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    தலைமறைவான மீரா மிதுன்

    தலைமறைவான மீரா மிதுன்

    இதனையடுத்து, அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். மேலும், இந்த வழக்கில் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜாரானார். முக்கிய குற்றவாளியான மீரா மீதுன் தலைமறைவானார். எனவே மீரா மிதுனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.

    போலீஸார் திணறல்

    போலீஸார் திணறல்

    இந்நிலையில், இந்த வழக்கு 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு ஆகஸ்ட் 6ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் எனவும் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் செப் 28ம் தேதியும் விசாரணைக்கு வந்தது,

    கண்டுபிடிக்க முடியவில்லை

    கண்டுபிடிக்க முடியவில்லை

    அப்போது மீரா மிதுன் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது அவர் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். செல்போன் எண்ணையும் மாற்றி வருகிறார். போலீஸார் விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்பட்டது. அப்போது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து டிமிக்கி

    தொடர்ந்து டிமிக்கி

    இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், அதேநேரம் தொடர்ந்து மீரா மிதுனின் குடும்பத்தினரை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    A warrant was issued against actress Meera Mithun for posting defamatory comments about a Scheduled Caste. Chennai Police informed the court that she is absconding in this case. The court expressed strong displeasure with the response of the police and The case was adjourned to November 14.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X