சினிமா மோகத்தில் ஆன்லைன் பாலியல் தொழிலில் சிக்கிய துணைநடிகைகள்...

சென்னை: சினிமாவில் கதாநாயகி ஆகும் ஆசையில் சென்னைக்கு வந்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட நான்கு துணை நடிகைகளைப் போலீசார் மீட்டுள்ளனர்.

கனவுத் தொழிற்சாலை என அழைக்கப் படும் திரைத்துறை, உண்மையிலேயே பலருக்கு பகல் கனவாகத் தான் போய் விடுகிறது. சினிமாவில் நடித்தால் பணம் மற்றும் புகழ் என ஒரே நாளில் பிரபலமடைய விரும்பும் பலர், சினிமாவில் நுழைய தேடும் வழி தான் தவறாகப் போய் விடுகிறது. இதனால் அவர்களது வாழ்வே சூன்யமாகி விடுகிறது.

அதிலும், சமீப காலமாக சினிமாவில் கதாநாயகி வேடம் தருவதாக வரும் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் அழகான இளம்பெண்கள் பலர் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்படும் பரிதாபம் சென்னையில் வேகமாக பரவி வருகிறது.

அந்தவகையில், சினிமா ஆசையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட நான்கு துணை நடிகைகளைப் போலீசார் மீட்டுள்ளனர்.

மசாஜ் சென்டரில் பாலியல்தொழில்....

மசாஜ் சென்டரில் பாலியல்தொழில்....

சென்னை ஆலந்தூர், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள, பிரபல மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்பு போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து, குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

அதிரடி சோதனை....

அதிரடி சோதனை....

அதனைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான விபசார தடுப்பு போலீசார் குறிப்பிட்ட மசாஜ் சென்டரில், அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மீட்பு....

மீட்பு....

அப்போது, அண்ட்ஜ மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் செய்து வந்த நான்கு இளம்பெண்களை போலீசார் மீட்டனர். போலீசாரால் மீட்கப் பட்ட அந்த நான்கு இளம்பெண்களும் ஏற்கனவே சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா ஆசை...

சினிமா ஆசை...

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மீட்கப்பட்ட அந்த இளம்பெண்கள், ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, சினிமா கதாநாயகி ஆசையில், வீட்டை விட்டு ஓடிவந்து, புரோக்கர்களிடம் மாட்டிக்கொண்டதும், பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரிய வந்தது.

புரோக்கர் கைது...

புரோக்கர் கைது...

இவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திரிவேணி (40) என்ற பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு போய் வந்த, பிரபல விபசார தாதா பாண்டியன் (40) என்பவரும் கைதாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X