'கலக்கப் போவது யாரு' புகழ் நவீனின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்
Recommended Video

சென்னை: கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் மிமிக்ரி கலைஞர் நவீனின் 2வது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து பிரபலமானவர் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த நவீன்(35). கமல் ஹாஸன், அஜித், விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று பேசி அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.
அவர் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

திவ்யா
நவீன் தன்னை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக திவ்யா(28) என்ற பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் தங்களுக்கு முறைப்படி பதிவுத் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் அளித்தார்.

நவீன்
திவ்யா அளித்த ஆதாரங்களை பார்த்த போலீசார் நவீனின் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்த ரிசார்டுக்கு உடனே கிளம்பிச் சென்றனர். திருமணத்தை நிறுத்திவிட்டு நவீனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதிர்ச்சி
முதல் மனைவி இருக்கும்போதே நவீன் 2வது திருமணம் செய்ய முயன்று போலீசில் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி பிரபலம் சுனிதா கார் விபத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில் நவீனும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

தம்பதி
நவீனுக்கும், திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்களாம். இந்நிலையில் தான் நவீன் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











