பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் மீரா மிதுன்? 19ஆம் தேதி ஆஜராக போலீஸ் சம்மன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனுக்கு சென்னை தேனாம்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு ஃபெமினாஸ் அமைப்பு நடத்திய மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர் மீரா மிதுன். இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்தது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது. ஆனால் அதில் உண்மையில்லை, தான் தமிழ் பெண் என்பதாலேயே இப்படி தனது பெயரை கெடுப்பதாக விளக்கம் கொடுத்தார் மீரா மிதுன்.

ரஞ்சிதா புகார்
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் மீரா மிதுன். இவர் மீது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நடிகை ரஞ்சிதா போலீஸில் புகார் அளித்துள்ளார்.

19ஆம் தேதி ஆஜராக சம்மன்
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு தேனாம்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 19ஆம் தேதி மீரா மிதுன் ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரா தரப்பு விளக்கம்
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆஜராவார் என மீரா மிதுன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்கடத்தல் புகாரில் வனிதா விஜயகுமார் எப்போது வேண்டுமானலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் பிரபலங்கள்
இந்நிலையில் மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் பிரபலங்கள் தொடர்ந்து மோசடி புகாரில் சிக்கி வருகின்றனர். கடந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தா பெயரும் அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











