திவ்யா கண்ணீர் குற்றச்சாட்டு..சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகருக்கு போலீஸ் சம்மன்!
சென்னை : நடிகை திவ்யா, தனது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறிய குற்றச்சாட்டின் பேரில், நடிகர் அர்னவ் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நடிகை திவ்யா கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்னவை காதலித்தார். இதையடுத்து, இருவரும் 5 வருடத்திற்கு மேலாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் திருமண போட்டோவையும் கர்ப்பமாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா வெளியிட்டு இருந்தார்.

திவ்யா கண்ணீர் பேட்டி
5 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்த இந்த காதல் ஜோடி தங்கள் குடும்ப சண்டையை வீதிக்கு இழுத்து கும்மியடித்து வருகின்றனர். காதல் கணவர் அர்னவ், என் கருகலையும் அளவுக்கு தாக்கியதாக கூறி மீடியாக்கள் முன் கதறினார். மேலும்,செல்லம்மாள் சீரியல் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் பேச்சை கேட்டுக்கொண்டுதான் தன்னை அடிப்பதாக கூறினார்.

மதம் மாறினேன்
மேலும், அவர் பல பெண்களுடன் தொடர்புவைத்து இருக்கிறார். மலேசியவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி பணம் வாங்கி உள்ளார் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மதம் மாறினால் தான் வீட்டில் பெற்றோர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று அர்னவ் கூறியதால், அவருக்காக மதம் மாறினேன் என பல புகார்களை கூறினார்.

எல்லாமே பொய்
திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்த அர்னவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று போட்டோ ஆதாரங்களை காட்டினார். நாங்கள் காதலித்தது சேர்ந்து வாழ்ந்தது எல்லாம் உண்மை தான். அவர் திருமணம் ஆனவர் என்பது தெரிந்து தான் அவரை காதலித்தேன். ஆனால், திவ்யா விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். திருமணத்திற்காக விவாகரத்து பேப்பரை கேட்டபோது தான், இந்த ஜனவரியில் தான் விவாகரத்தானது தெரிந்தது என்றார். மேலும் அவர் மனநோயாளி என அர்னவும் தன் பங்குக்கு பல குற்றச்சாட்டுகளை கூறினார்.

சிக்கலில் சீரியல் நடிகர்
இந்நிலையில் சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அர்னவ் நாளை மறுதினம் 14ம் தேதி நேரில் ஆஜராகும் படி போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











