ஜெயம் ரவியின் புகார்.. வீட்டுக்கு சென்ற காவல் துறை?.. ஆர்த்தி என்ன செய்தார்?.. பரபர தகவல்கள்

சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதற்கிடையே ரவியை அவரது மாமியாரும், மனைவியும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதனால்தான் இந்த விவாகரத்து முடிவு என்றெல்லாம் தகவல்கள் பரவின. ரவி விவாகரத்து அறிவித்துவிட்டதால் பிரச்னை ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்; திடீர் திருப்பமாக காவல் நிலையத்தில் ஆர்த்தி மீது புகாரும் அளித்திருக்கிறார்.

ஜெயம் ரவியை ஆர்த்தியும், அவரது தாய் சுஜாதாவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவருக்கான கதை, சம்பளம் என அனைத்தையுமே அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இதன் காரணமாக ரவி கடந்த சில காலமாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்தார். முக்கியமாக பாண்டிராஜ் கதையில் ரவி நடிக்க முடியாமல் போனதற்கு ஆர்த்தி தரப்புதான் காரணம். இதன் காரணமாக ஆர்த்தியை அவர் விரைவில் பிரிந்துவிடுவார் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் ஓடின.

jayam ravi aarthi


கன்ஃபார்ம் செய்த ரவி: இருந்தாலும் அந்தத் தகவல்கள் எல்லாம் பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் எந்த சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தார் ரவி. நிலைமை இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு ரவி வெளியிட்ட அறிக்கையில், தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர் எடுத்த முடிவு தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாது. அவரை சந்திக்கவே முடியவில்லை என்று சொல்லி ஆர்த்தி ஒரு குண்டை போட்டார்.

அதெல்லாம் தெரியும்: ஆனால் விவாகரத்தை பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்னரே ஆர்த்தியிடம் பேசினேன். அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பினேன் என்று ரவி சமீபத்தில் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தன்னுடன் இணைத்து பேசப்படும் பாடகி கெனிஷா குறித்தும் பேசிய அவர், அந்தப் பெண்ணை இதில் இழுக்க வேண்டாம். அவர் ஒரு ஆதரவற்றவர். பலருக்கு உதவி செய்துவருகிறார். நானும் அவரும் சேர்ந்து ஒரு ஆன்மீக மையத்தை அமைக்கலாம் என்று இருக்கிறோம். வாழு வாழ விடு என்று குறிப்பிட்டார்.

ஜெயம் ரவி பேட்டி: இதனையடுத்து ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'ஆர்த்தியிடம் தனக்கு டைவர்ஸ் வேண்டுமென்று தெளிவாகவே சொல்லிவிட்டேன். ஒருகட்டத்தில் மூச்சு முட்ட ஆரம்பித்தது. அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது என்னிடம் ஒரே ஒரு கார் மட்டும்தான் இருந்தது. கையில் எதுவுமே இல்லை. மும்பையில் குடிபுகுந்தேன். அவ்வப்போது சென்னை வந்தேன். எனது மகனின் பிறந்தநாளுக்கு கடைசியாக வந்தேன். அவனிடமும் எனது விவாகரத்து பற்றி சொல்லிவிட்டேன்’என்றிருந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி: மேலும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டையும் ஆர்த்தியிடமிருந்து அவர் சமீபத்தில்தான் மீட்டார். இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா ரவியின் எல்லாமே ஆர்த்தியின் கைகளில்தான் இருந்தனவா. இவ்வளவு சம்பாதித்திருக்கும் ரவி; தன்னிடம் ஒரே ஒரு கார் மட்டும்தான் இருந்தது கையில் எதுவுமே இல்லை என்று சொல்லியிருக்கிறாரே. எனில் ரவியை ஆர்த்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது உண்மைதானோ என்று சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார்கள்.

வீட்டுக்கு சென்ற காவல் துறை: இந்நிலையில் ஆர்த்தியிடமிருந்து தனது பாஸ்போர்ட், கார் உள்ளிட்ட உடைமைகளை மீட்டு தருமாறு ரவி நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தச் சம்பவம் இந்த விஷயத்தில் மேலும் பரபரப்பை கூட்டியது. சூழல் இப்படி இருக்க ரவி அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்த்தியின் வீட்டுக்கு காவல் துறையினர் சென்று விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்போது ஆர்த்தி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும்; அதேசமயம் கொஞ்சம் டல்லாகவே ரியாக்ட் செய்தார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X