twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஏஎஸ் அதிகாரிகளை போல் அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும்: கமல்

    ஜிப்ரான் இசையமைத்திருக்கும் " கெட் யூவர் ஹான்ட்ஸ் ஆப் மீ" என்ற இசை ஆல்பத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டார்.

    |

    Recommended Video

    அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வைக்க வேண்டும்: கமல்

    சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

    ஜிப்பி காமிக் சினிமாஸ் சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் " கெட் யூவர் ஹான்ட்ஸ் ஆப் மீ (Get your freaking hands off me)" என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
    விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது,

    என்னவோ இவளுக்கு மட்டும் தான் இருக்கிற மாதிரி காட்டுறாளே: நடிகையை பார்த்து சக நடிகைகள் குமுறல் என்னவோ இவளுக்கு மட்டும் தான் இருக்கிற மாதிரி காட்டுறாளே: நடிகையை பார்த்து சக நடிகைகள் குமுறல்

    தேவையே வந்திருக்கக் கூடாது

    தேவையே வந்திருக்கக் கூடாது

    "என்னுடைய 3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன்.

    ஜிப்ரானுக்கு முன்னால் பாரதியார்

    ஜிப்ரானுக்கு முன்னால் பாரதியார்

    ஜிப்ரானுக்கு முன்னாலேயே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார். பெண்ணுக்கு தலைவர் பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது.

    பயமே இருக்கக் கூடாது

    பயமே இருக்கக் கூடாது

    பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான்.

    மீ டூ குரல் எழலாம்

    மீ டூ குரல் எழலாம்

    மீ டூவில் ஏன் இப்போது வெளிப்படுகிறார்கள் என கேட்கிறார்கள். எப்போது கேட்டால் என்ன. நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது.

    வள்ளுவர் கூறும் நடுநிலைமை

    வள்ளுவர் கூறும் நடுநிலைமை

    வலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி.

    வாக்குறுதி கொடுங்கள்

    வாக்குறுதி கொடுங்கள்

    நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான். வழக்கமாக அரசியல்வாதிகள் தான் வாக்குறுதி கொடுப்பார்கள், இங்கு நீங்கள் எனக்கு வாக்குறுதி தர வேண்டும்.

    அரசியல்வாதிகளுக்கும் தேர்வு

    அரசியல்வாதிகளுக்கும் தேர்வு

    ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன். கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது. நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது.

    மக்களுக்காக வந்திருக்கிறேன்

    மக்களுக்காக வந்திருக்கிறேன்

    மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்."

    இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

    English summary
    Makkal needhi maiyam party pesident actor Kamalhassan insists to conduct exams for politicians.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X