Vijay: விஜய் ஒரு தலைவனே கிடையாது.. என்னோட அடியை மட்டும் பாருங்க.. சரத்குமார் சவால்!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை கரூர் துயரச் சம்பவத்தில் இருந்து காட்டமாக விமர்சித்து வருபவர், நடிகரும் பாஜகவைச் சேர்ந்த வருமான நடிகர் சரத்குமார். இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் விஜய் குறித்த கேள்விக்கு காட்டமான பதிலை அளித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அவர் அளித்த பேட்டியில், தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக பகிர்ந்து கொண்டார். அதாவது, " நான் பாஜகவில் இணைந்து நீண்ட காலம் ஆகியும் பாஜகவில் எனக்கு பதவி வழங்காமல் உள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு நான் பதில் அளித்தேன். இதுவரை பாஜகவில் எனக்கும் என் ஆதரவாளர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை. பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்ற வில்லை.

பொறுப்பு: தேர்தல் நேரத்தில் பொறுப்பு வழங்கவில்லை என்றால் எப்படி செயல்பட முடியும்? சிறப்பாக செயல்படுகிறோம் ஆனால் பொறுப்புகள் ஏன் வழங்கவில்லை என்று பொறுப்பாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதேபோல் தலைவருக்கு பொறுப்பு கொடுக்காமல் எங்களுக்கு பொறுப்பு வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். சமத்துவ மக்கள் கட்சியையும் ஏன் தூங்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இது தொடர்பாக பாஜக மாநில தலைமைக்கும், தேசிய தலைமைக்கும் கடிதம் எழுத உள்ளேன்.
ஆதங்கம்: எனக்கு பொறுப்பு கொடுக்கவில்லை என்பதை நான் வேதனையாக சொல்ல வில்லை, ஆதங்கமாக சொல்லுகிறேன். திருச்சி கூட்டத்தில் மேடையில் நீங்கள் இருக்குறீர்கள், உங்கள் புகைப்படம் கூட மேடையில் இல்லை என்று நிர்வாகிகள் வருத்தத்துடன் கூறினார்கள். பாஜக தலைமை சொன்னால் கூட, நானோ எனது மனைவியோ இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம் " என்று தெரிவித்தார்.
விஜய்: இவரது இந்த போட்டிக்குப் பின்னர் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நான் கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தலில் நான் எப்படி பிரச்சாரம் செய்தேனோ, அதேபோல் எதைத் தாக்கி பேச வேண்டுமோ, அதைத் தாக்கி பேசுவேன், எப்படி தாக்கி பேச வேண்டுமோ அப்படி பேசுவேன். விஜய் எல்லாம் தலைவனே கிடையாது. கரூர் துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்த பின்னர், அவர்களை நேரில் சந்திக்காமல், அவர்களை தன்னை பார்க்க வரவைத்தாரே அதிலேயே தெரிகிறது" என்று தெரிவித்தார். சரத்குமார் இவ்வாறு தெரிவித்தது பெரும் பேசு பொருளாக உள்ளது. இருவரும் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











