சூர்யா ஜோடியாக அசின் நடிக்கக் கூடாதாம்!
சூர்யா ஜோடியாக அசின் நடிப்பது உண்மையாக இருந்தால் அந்தப் படப்பிடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று சிலர் களமிறங்கியுள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்துக்கு இன்னும் பொருத்தமான ஹீரோயின் கிடைத்தபாடில்லை.
முதலில் த்ரிஷா என்றார்கள். அவரை சூர்யாவுக்குப் பிடிக்காமல் போனது. அடுத்து அமலா பால் என்றார்கள். அவரை கவுதம் மேனனுக்கு பிடிக்கவில்லை.

குத்து ரம்யா
குத்து ரம்யா எனப்படும் திவ்யா இந்தப் படத்தில் நடிக்க தயாராக இருந்தார். அவர் ஏற்கெனவே சூர்யாவுடன் நடித்தவர்தான். ஆனால் கடைசியில் அவரும் இல்லை என்றாகிவிட்டது.

இப்போ அசின்..
எனவே அசினை ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் கவுதம் மேனன். இவருடன் நடிக்க சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

அப்போ ஜோதிகா எதிர்ப்பு
ஏற்கெனவே சூர்யாவுடன் சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தில் நடிக்க விருந்தவர் அசின். ஆனால் அப்போது அசின் நடிக்க ஜோதிகா எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. படமும் கைவிடப்பட்டது. அந்தப் படத்தின் இயக்குநரும் கவுதம் மேனன்தான்.

இப்போது லோக்கல் கட்சி எதிர்ப்பு
ஆனால் இந்த முறையும் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சதி சார்பில் வெளியான அறிக்கை ஒன்றில் சூர்யா ஜோடியாக அசின் நடித்தால் ஷூட்டிங் நடக்க முடியாத அளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











