சோழர் பரம்பரையில் ஒரு MLA.. Real OG is Back.. அமைதிப்படை ரீ ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் புதுப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் விட பழைய படங்களின் ரீ ரிலீஸ்க்கு கிடைக்கும் வரவேற்பு மொத்த திரையுலகையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பல எவர் கிரீன் படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். இது மற்ற மொழிகளிலும் இருந்தாலும் தமிழில் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடித்து கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான படம் அமைதிப்படை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து ரீ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் கதை, வசனம் எழுதி இயக்கிய படம் அமைதிப்படை. இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடிக்க, நடிகை கஸ்தூரி, ரஞ்சிதா, சுஜாதா, அல்வா வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதேபோல் மணிவண்ணனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்து, ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

Political Satire Amaidhi Padai Set for Grand Re-Release After 32 Years on April 10

ரீ ரிலீஸ்: அதாவது வரும் மார்ச் 30ஆம் தேதி படத்தின் டிரைலரும், ஏப்ரல் 10ஆம் தேதி படத்தை ரீ ரிலீஸ் செய்யப்போவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. படம் வெளியான 1994ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அரசியலில் இருப்பவர்களின் பலரின் முகத்திரையை கிழித்த படம் என்றே இதைக் கூறலாம். மேலும் தற்போதைய அரசியல் சூழலுக்கும் இந்த படம் பொருந்தும் வகையில் இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

Political Satire Amaidhi Padai Set for Grand Re-Release After 32 Years on April 10

கதாபாத்திர வடிவமைப்பு: அமாவாசை - நாகராஜ சோழன் MA. MLA என வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் இன்றைக்கு சினிமாவில் கால்பதிக்க ஆசைப்படும் பலருக்கும் ஒரு முன் உதாரணம். அதேபோல் தங்கவேல் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்தையும் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருப்பார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமே, படத்தின் திரைக்கதை நகர்வு, அத்துடன் பார்த்து பார்த்து செதுக்கியது போல இருந்த வசனங்கள் தான். படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி அதாவது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு 13 நாட்களுக்கு முன்னர் வெளியாவதால், படக்குழு சரியான நேரத்தில் படத்தை வெளியிடுகிறது என்று பலரும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X