விஜய் மகள் வயது இருக்கும் அந்த மாணவிகளுக்கு.. இப்படியா கொச்சையா பேசுறது.. வேல்முருகனுக்கு குவியும் கண்டனங்கள்

சென்னை: நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றம், அதன் பின்னர் தனது கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகள், அவர்களின் சகோதர சகோதரிகள் விஜய் மீது இருக்கும் அன்பை பல வகைகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, விஜய்யை கட்டிப்பிடிப்பது, விஜய்க்கு பூக்கள் கொடுப்பது, விஜய்க்கு முத்தம் கொடுப்பது, விஜய்யோடு விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது, விஜய்க்கு சிறப்பு பரிசு வீட்டிலிருந்து கொண்டு வருவது, விஜய்க்காக கவிதை வாசிப்பது என, விஜய் மீது வைத்துள்ள அன்பை பொழிந்து வருகிறார்கள். இது பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக உள்ளது. சில மாணவ மாணவிகள் விஜய்யை பார்த்து அழுகிறார்கள். மாணவ மாணவிகள் எது செய்தாலும் கூடுமானவரை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் விஜய் இருக்கிறார்.

விஜய்யின் மகள் வயதையுடைய அவர்களை விடவும் மிகவும் இளைய வயதுடைய பள்ளி படிக்கும் குழந்தைகள் விஜய்யை கட்டிப்பிடிப்பது, விஜய் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்டுவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். மேலும் அவரது பேச்சு மிகவும் கொச்சையாகவும் அநாகரீகமாகவும் இருப்பதாக இணையவாசிகள் தொடங்கி விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Politician Velmurugan Worst Comment Connect With Girl Students and TVK Vijay Educational Scholarship
Photo Credit:

மோசமான பேச்சு: நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், " இரண்டு கிராம் பரிசு கொடுத்ததும், நாம் முட்டாள் பசங்க, நான் நடிகனைக் குறை சொல்ல மாட்டேன். ஒரு வயது பெண்ணைக் கூட்டிக் கொண்டு போகிறான். மூன்று ஆண்டுகள் கழித்து 12ஆம் வகுப்பு முடித்து, டிகிரி முடிக்கும் பெண்ணை கூட்டிக் கொண்டு போகிறான். அறிவு வேண்டாமா தமிழனுக்கு? தான் பெற்று வளர்த்த பெண், நாளைக்கு மாற்றன் மனைவியாக வாழவேண்டிய ஒரு பெண், அப்பா முன்னிலையில், அம்மா முன்னிலையில் ஆயிரக்கணக்கான ஊடகங்களுக்கு முன்னிலையில், ஒரு சினிமா கூத்தாடிப் பயல கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாய். இது என்ன ஈனப்பிறவி, தமிழனின் பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணா ( கட்டிப்பிடிப்பது போல உடல்மொழியை வெளிப்படுத்துகிறார்), விஜய் நடிங்க, நன்றாக நடித்துள்ளாரா பாராட்டுங்க" என்று பேசியுள்ளார்.

எதிர்ப்பு: இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோவை இணையவாசிகள், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் தற்போது இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். மேலும் இவரது பேச்சை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வேல்முருகனின் பேச்சு மிகவும் கொச்சையாக இருப்பதாகவும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் வேல்முருகன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், விஜய் மகள் வயது இன்னும் சொல்லப்போனால் அவரது மகளின் வயதை விட குறைவான வயதுடைய குழந்தைகளை அவமானம் செய்வது போலவும் அவர்களின் அன்பை புரிந்து கொள்ளாமல் கொச்சையாக விமர்சித்துள்ளார் என்றும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X