twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரை பிரபலங்கள் மட்டுமல்ல.. அரசியல் பிரபலங்களையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்ற இர்ஃபான் கான்!

    |

    சென்னை: இர்ஃபான் கானின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Recommended Video

    Shocking: Irfan Khan Passed Away | Mystery behind

    பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் பெருங்குடல் தொற்றால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று திடீரென மரணமடைந்தார்.

    பத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேக்குகள்.. பல லட்சம் பேர் இரங்கல்.. இர்ஃபானுக்கு ரசிகர்கள் ராயல் சல்யூட்பத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேக்குகள்.. பல லட்சம் பேர் இரங்கல்.. இர்ஃபானுக்கு ரசிகர்கள் ராயல் சல்யூட்

    அவரது மரண செய்தியை கேட்டு பாலிவுட் பிரபலங்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவை நம்ப முடியாமல் பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    அந்த வகையில் அரசியல் பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், இர்பான் கான் மரணமடைந்ததை அறிந்து வருந்துகிறேன். பல்துறை மற்றும் திறமையான நடிகரான இவர் உலகளாவிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அரங்கில் பிரபலமான இந்திய பிராண்ட் தூதராக இருந்தார். அவர் அதிகம் மிஸ் செய்யப்படுவார். இந்த வருத்தத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

    ஸ்மிருதி இராணி

    ஸ்மிருதி இராணி

    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிவிட்டுள்ள டிவிட்டில், அவர் நம் நினைவுகளில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுத்த திறமையுடன் பொறித்தார். பான் சிங் தோமரின் ஆர்வத்திலிருந்து, ஆங்ரேஸி மீடியத்தில் ஒரு சுறுசுறுப்பான தந்தை வரை இர்பான் கான் ஒரு நடிகராக இருந்தார். அவர் விட்டுச் சென்ற கதாபாத்திரங்களில் இன்னும் மூச்சுவிட்டு கொண்டிருப்பதால் அவர் காலமானதை நீங்கள் எப்படி துக்கப்படுத்துகிறீர்கள்.. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

    வசூந்தரா ராஜே

    வசூந்தரா ராஜே

    இதேபோல் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், வசூந்தரா ராஜே பதிவிட்டுள்ள டிவிட்டில் இர்ஃபான் கான் மரண செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். ஒரு கலைஞரின் சிறப்பம்சம், ராஜஸ்தானின் மறுமுகம். இன்று சினிமா உலகம் பல்துறை மற்றும் திறமைகளின் சக்தியை இழந்துள்ளது. அவர் மிஸ் செய்யப்படுவார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

    ஜோதிராதித்யா சிந்தியா

    ஜோதிராதித்யா சிந்தியா

    ஜோதிராதித்யா சிந்தியா பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்த செய்தியை கேட்டு ரொம்பவே வருத்தமடைந்தேன். இர்ஃபான் கான் இந்திய திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். சந்தேகத்திற்கு இடமின்றி, இது நமக்கு மிகப்பெரிய இழப்பு! அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கியவர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Politicians also tears for Irfan khan. Irfan Khan passes away today in Mumbai hospital.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X