பீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்!

பீம் பட நாயகனை அம்பேத்கர் என நினைத்து அரசியல் கட்சியினர் சிலர் போஸ்டரில் பயன்படுத்தியுள்ளனர்.

Recommended Video

நடிகரை அம்பேத்கராக நினைத்து பீம் பட போஸ்டரை பயன்படுத்திய கட்சிகள்!- வீடியோ

சென்னை: அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறை சொல்லும் 'பீம்' திரைப்படத்தின் நாயகனை நிஜ அம்பேத்கர் என நினைத்து அரசியல் கட்சியினர் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் "ஆய்வுக்கூடம்" என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ராஜகணபதி. இவர் தற்போது "பீம் "என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ளார்.

அப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அம்பேத்கர் போலவே ராஜகணபதி காட்சியளிக்கிறார். இந்த படங்களை இணையதளத்தில் இருந்து எடுத்து, தங்கள் பேனர் மற்றும் கட் அவுட்களில் அரசியல் கட்சியினர் சிலர் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை மட்டுமல்ல:

சென்னை மட்டுமல்ல:

சென்னையின் வள்ளலார் நகர், கொருக்குபேட்டை,வண்ணாரப்பேட்டை மற்றும் மகாராணி திரையரங்கம் எதிரே என முக்கிய பகுதிகளில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கரூர்,சேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் இந்த பேனர்கள் மக்கள் கண்களில் தென்படுகின்றன.

இசை ஆல்பங்கள் :

இசை ஆல்பங்கள் :

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அவருடைய போட்டோ பிரபலம் ஆகியுள்ளது. அம்பேத்கர் சம்பந்தப்பட்ட இசை ஆல்பங்களிலும் அவருடைய படங்கள் தென்படுகின்றன. மேலும் அவருடைய போட்டோக்கள் உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் டெல்லியிலும் பரபரப்பாக ஒட்டப்பட்டு வருகின்றன. இவர் நடிகர் ராஜகணபதி என்று தெரியாமலேயே இந்த போட்டோ தான் அம்பேத்கார் என விரும்பி அரசியல்வாதிகளால், மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

வாழ்த்துக்கள்:

வாழ்த்துக்கள்:

நடிகர் ராஜகணபதி இதை தனக்கு தன் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வரப்பிரசாதமாக எண்ணி பெருமை கொள்கிறார். நடிகர் ராஜகணபதியை தெரிந்த சில அரசியல் தலைவர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெருமை:

பெருமை:

பீம் படத்தை பற்றி நடிகர் ராஜகணபதி கூறுகையில், " சட்ட மேதை அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தலைவர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைவராக விளங்கியவர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X