For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொஞ்சம் பிளாஷ்பேக்.. தமிழ் சினிமாவில் எனக்கு எதிராக நடந்த அரசியல்.. பிரபல முன்னாள் ஹீரோ பகீர்!

  By
  |

  சென்னை: தமிழ் சினிமாவில் எனக்கு எதிராக நடந்த அரசியல் காரணமாகத்தான் தெலுங்கு சினிமாவுக்கு சென்றேன் என்று பிரபல முன்னாள் ஹீரோ தெரிவித்துள்ளார்.

  யாஷிகா பார்த்தா ஒரு மாதிரி தான் இருக்கு..கலாய்த்த கோபி, சுதாகர்- வீடியோ

  தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே முக்கியமான நடிகராக மாறிய சிலரில் ஒருவர் சுதாகர்! ஞாபகமிருக்கிறதா இந்த முன்னாள் ஹீரோவை?
  'கிழக்கே போகும் ரயில்' படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகர், 80-களில் டாப் ஹீரோ!

  1978 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில்தான் அறிமுகமானார் ராதிகாவும். இந்தப் படமும் பாடல்களும் கன்னாபின்னா ஹிட்!

  எங்களுக்கு புடிச்ச எமோஜி குப்பைத் தொட்டி தான்.. கிம் கர்தாஷியனையே பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!எங்களுக்கு புடிச்ச எமோஜி குப்பைத் தொட்டி தான்.. கிம் கர்தாஷியனையே பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  பூவரசம் பூ பூத்தாச்சு

  பூவரசம் பூ பூத்தாச்சு

  மாஞ்சோலை கிளிதானோ, கோயில் மணி ஓசை இங்கே கேட்டதாரோ?, பூவரசம் பூ பூத்தாச்சு என்பது உட்பட அனைத்துப் பாடல்களையும் முணுமுணுக்காத உதடுகள் இல்லை அப்போது. இப்போதும் கல்லூரி, பள்ளி காலங்களை அசைபோடும் சீனியர்களுக்கு இந்தப் பாடல்கள் தங்கள் கடந்த கால ஞாபகங்களை குதறிவிட்டுச் செல்லாமல் இருக்காது, இனிமையாக! இந்தப் படத்தை அடுத்து சுதாகர், ராதிகா சூப்பர் ஹிட் ஜோடியானார்கள் தமிழ் சினிமாவில்.

  சுவரில்லாத சித்திரங்கள்

  சுவரில்லாத சித்திரங்கள்

  அடுத்து எம்.ஏ.காஜாவின் இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்குப் புதுசு, நிறம்மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் என தொடர்ந்தது சுதாகரின் ஹிட் பயணம். தமிழில் நடித்துக் கொண்டே தெலுங்கிலும் ஹீரோவாக நடித்து வந்த சுதாகர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போனார்.

  காமெடி நடிகராக

  காமெடி நடிகராக

  தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஒரு கட்டத்தில் காமெடி நடிகராக அவர் மாறியது சோகத்திலும் சோகம்தான். ஒரு டாப் ஹீரோவை காமெடியனாக ஏற்றுக்கொண்டார்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள். அங்கு சில படங்களைத் தயாரிக்கவும் செய்த சுதாகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.

  சிரஞ்சீவி என் நண்பர்

  சிரஞ்சீவி என் நண்பர்

  தமிழ் சினிமாவில் இருந்து திடீரென விலக என்ன காரணம் என்பதைத் தெரிவித்திருக்கிறார் இப்போது. ''சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தபோது சிரஞ்சீவி, ஹரிபிரசாத் போன்றோர் என் நண்பர்கள். ஒன்றாகத்தான் சென்னையில் சுற்றுவோம். வீட்டில் இருந்து வரும் மணியார்டரை பகிர்ந்துகொண்டு செலவழிப்போம். அந்த நாட்களை மறக்க முடியாது.

  இயக்குனர் பாரதிராஜா

  இயக்குனர் பாரதிராஜா

  முதல் பட வாய்ப்பு இயக்குனர் பாரதிராஜாவால் கிடைத்தது. எனக்குத் தமிழ் தெரியாது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவருக்குத் தெலுங்கு தெரியும். அவரும் பாரதிராஜாவும் வசன உச்சரிப்புக்கு எனக்கு உதவினார்கள். வசனங்களைத் தெலுங்கில் எழுதி வைத்துக்கொண்டு நடிப்பேன். அந்தப் படம் ஹிட்டானதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

  நானும் ராதிகாவும்

  நானும் ராதிகாவும்

  பிறகு தமிழில் சுமார் 48 படங்கள் வரை நடித்திருப்பேன். இதில் 35-க்கும் மேற்பட்ட படங்கள் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. நானும் ராதிகாவும் ஜோடி சேர்ந்து 18 படங்கள் வரை நடித்தோம். இதில் பெரும்பாலான படங்கள் ஹிட்டானது. ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பிவிட்டேன். அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் எனக்கு எதிராக நடந்த அரசியல்.

  காமெடி வேடங்கள்

  காமெடி வேடங்கள்

  அது என்ன என்று இப்போது கேட்கிறார்கள். அது முடிந்து போனது. கடந்த கால பிரச்னைகளை இப்போது சொல்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது. அதனால் வேறு விஷயங்களை பேசலாம். அதுபற்றி பேச வேண்டாம். இப்போது காமெடி வேடங்களில் நடித்து வருவது பற்றி கேட்கிறார்கள். அது விதி. நம் கையில் எதுவும் இல்லை. எல்லாம் கடவுளின் கருணை. இவ்வாறு கூறியிருக்கிறார் சுதாகர்.

  English summary
  Yesteryear hero Sudhakar says, 'Some politics forced me to leave Tamil films'
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X