twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதுகில் குத்துகிறார்கள்... அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன்: காயத்ரி ரகுராம் அறிவிப்பு!

    |

    சென்னை: அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

    தமிழ் சினிமா நடிகையாகவும், நடன இயக்குனராகவும் இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானார்.

    பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக சிறிது காலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார்.

    இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து தான் விலகுவதாக அவர் டிவீட் செய்துள்ளார்.

    'பர்தா.. தபசும்.. ரம்ஜான் வாழ்த்து..' புதிய போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கஸ்தூரி! 'பர்தா.. தபசும்.. ரம்ஜான் வாழ்த்து..' புதிய போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கஸ்தூரி!

    அரசியல் மலிந்துவிட்டது

    இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், " மற்றவர்கள் மீது பழிபோட்டு, அரசியல் தற்போது மலிந்துவிட்டது. குழந்தைகள் போன்று சண்டைபோடும், முதிர்ச்சியற்ற தலைவர்கள் தான் இங்கு இருக்கிறார்கள். இங்கு ஆக்கப்பூர்வமான விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை. மக்கள் என்ன முடிவு செய்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது. இந்தியாவின் தலையெழுத்தை நான் மாற்ற முடியுமா? அது எங்கும் நகரவில்லை. அதை பற்றி யாருக்கும் அக்கறை இல்லை", என தெரிவித்துள்ளார்.

    போலிகள்

    மற்றொரு டிவீட்டில், "எனக்கு அரசியல் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருந்துகிறேன். கடைசியில் நாம் ஜோக்கர்களாக ஆக்கப்படுகிறோம். இது எனது தனிப்பட்ட கருத்து தான். சினிமாவை விட அரசியலில் தான் அதிக நடிகர்கள் இருக்கிறார்கள். போலியான போராட்டக்காரர்கள், போலியான தலைவர்கள், போலியான தொண்டர்கள் மற்றும் போலி உறுப்பினர்கள். இதுதான் முடிவில் நமக்கு கிடைக்கிறது", என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

    நடிக்க முடியாது

    அதேபோல், "அவர்களுள் ஒருவராக இருக்க நான் விரும்பவில்லை. உண்மையாகவும், விஸ்வாசமாகவும், அர்ப்பணிப்புடனும் அவர்கள் இல்லை. முதுகில் குத்துபவர்களும், வெறுப்பை காட்டுபவர்களும் தான் இருக்கிறார்கள். 24 மணி நேரமும் என்னால் நடித்துக்கொண்டே இருக்க முடியாது. நேரம் வரும் போது நான் விஸ்வாசம், உண்மை மற்றும் அர்ப்பணிப்புடன் இறங்குவேன். அரசியல்வாதி என்பது வில்லன் வேடம். குள்ள நரித்தனமான எதிர்மறை விஷயம் அது", என மற்றொரு டிவீட்டில் காயத்ரி தெரிவித்துள்ளார்.

    பாடம் படிக்க விரும்புகிறேன்

    மேலும், "எனவே நான் அரசியலுக்கு வெளியே இருந்து தீர ஆராய்ந்து, பாடம் படிக்க விரும்புகிறேன். எனவே நான் ஒரு சிறு இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு", என காயத்ரி கூறியுள்ளார்.

    English summary
    Actress Gayathri Raghuram tweeted that she is taking a break from politics to learn things.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X