'மெர்சல்' ரிலீஸ் சிக்கலுக்கு அரசியலே காரணம் - நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
Recommended Video

சென்னை : விஜய் ரசிகர்கள் இந்த வருடத் தீபாவளியை 'மெர்சல்' தீபாவளியாக கொண்டாடத் தயாராகி வருகின்றனர். அதற்காக படத்தைத் திரையில் காணும் நாளை எதிர்பார்த்து ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் படம் தயாராகும்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் தான் தயாரானது. ஆனால் ரிலீஸ் நெருங்கும்போது டீசர் வெளியானது முதல் தொடங்கி பல பிரச்னைகள் ரவுண்டு கட்டி அடிக்கின்றன.
'மெர்சல்' படக்குழுவினர் ஒவ்வொரு பிரச்னையையும் நீதிமன்றம் வாயிலாகத் தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நிதின் சத்யா 'மெர்சல்' படத்துக்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நிதின் சத்யா
'சென்னை - 600028' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவர் நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் 'மெர்சல்' படத்தின் ரிலீஸ் சிக்கல் குறித்து ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புதிதாக பிரச்னைகள்
ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் நெருங்கும்போது மட்டும் ஏன் பிரச்னை புதிதாக வருகிறது என்று தெரியவில்லை. மெர்சல் கண்டிப்பாக மாஸ் வெற்றியடையும். படக்குழுவினர் ஒவ்வொருவரும் அவ்வளவு உழைப்பு போட்டுள்ளனர்.
அரசியல் இருக்கிறது
சில அரசியல் காரணங்களால் தான் மெர்சல் படத்துக்கு பிரச்னைகள் வருகிறது. ஆனால் எல்லா பிரச்னைகளும் முடிந்து மெர்சல் திரையில் கலக்கும் என தனது ட்விட்டரில் ஒரு வீடியோ மூலம் கூறியுள்ளார் நிதின் சத்யா.
என்ன இருந்தாலும்
நிதின் சத்யாவின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். 'என்ன இருந்தாலும், 'பந்தயம்' படத்துல தளபதியோட ரெண்டு சீன்ல நடிச்சவராச்சே... அந்த அன்பு என்னைக்கும் குறையாது. நன்றி பிரதர்' எனக் கூறியுள்ளார் விஜய் ரசிகர் ஒருவர்.
முதல் குரல்
'சினிமாத்துறையில் இருந்து விஜய்க்கு ஆதரவாக வரும் முதல் குரல் உங்களுடையது. ரொம்ப நன்றி ப்ரோ... இதை மறக்கமாட்டோம்.' ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











