ஏய்யா அண்ணாமலை, அத்திவரதர் அடுத்த வாட்டி வெளியே வருவதற்குள் அரசியலுக்கு வருவியாய்யா?
Recommended Video
சென்னை: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு மீம்ஸ் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு என்று பல ஆண்டுகளாக கேட்டு வந்த ரஜினிகாந்த் ஒரு சுபயோக சுபதினத்தில் அரசியலுக்கு வர்றேன் கண்ணா என்று அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுறோம் கண்ணா என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவர் சொல்வதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் என்று ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்பதால் அதுவரை தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு மீம்ஸ் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அத்திவரதரை குளத்திற்குள் வைத்துவிட்டார்கள். இனி 40 ஆண்டுகள் கழித்து தான் அவரை தரிசிக்க முடியும். இந்நிலையில் அத்திவரதர் அடுத்த முறை வெளியே வருவதற்குள் நீங்கள் அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்டு போடப்பட்டுள்ள மீம்ஸ் அதிக அளவில் ஷேர் செய்யப்படுகிறது.
அரசியலுக்கு எப்பொழுது வர வேண்டும், எப்படி வர வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று ரஜினி தெளிவாக உள்ளார். இந்நிலையில் அவரை போய் கலாய்த்து இப்படி மீம்ஸ் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











