twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்கார் ‘அரசியல்’.. சினிமாவில் மட்டுமே இது சாத்தியம்!

    விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளியையொட்டி ரிலீசானது.

    |

    சென்னை : முழுக்க முழுக்க தமிழக அரசியலை மையமாக வைத்து வெளிவந்துள்ள சர்கார் திரைப்படத்தில் கமர்ஷிலாக சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்து நிஜத்தில் சாத்தியம் தானா என்ற கேள்வி படம் பார்த்த அனைவருக்கும் நிச்சயம் எழும்.

    படத்தில் நாயகன் விஜய் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ. அமெரிக்காவில் இருந்து ஓட்டுப்போடுவதற்காக தமிழகம் வரும் அவர், இங்குள்ள நிலைமையை சரிசெய்ய அரசியல் புரட்சிக்கு வித்திடுகிறார். கற்பனையில், சினிமாவில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய விஷயம் இது.

    ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு பஞ்ச் பேசி கைதட்டல் வாங்குகிறார் விஜய். இந்த வசனங்கள் எல்லாம் கைதட்டல் வாங்கவா அல்லது உண்மையான அக்கறையில் பேசியதா என்பது தெரியவில்லை. உண்மையான அக்கறை என்றால், விஜய்க்கு நிச்சயம் பாராட்டுக்கள்.

    வலிமையான வசனம்:

    வலிமையான வசனம்:

    கலவரக் காட்சிக்கு பிறகு ஒரு பெண்ணை தூக்கி வைத்துக்கொண்டு விஜய் பேசும் அந்த வசனம் கண்களில் கண்ணீர் வரவழைப்பவை. 'இரண்டு புள்ள பெத்தவளையா டா வலி தாங்குவியான்னு கேக்குறீங்க' எனும் அந்த வசனம் பெண்மையின் வலிமையை உணர செய்கிறது.

    பிரதிபலிப்பு:

    பிரதிபலிப்பு:

    'இங்க பிரச்சினையை தீர்க்க இன்னொரு பிரச்சினை தான் தேவை' என்ற வசனம் தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சியாளர்கள் கடைபிடிக்கும் நிலைபாட்டை அச்சு அசலாக பிரதிபலிக்கிறது. மேலும் பல வலிமையான வசனங்களை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

    அது மக்கள் நல்வாழ்வுத்துறை:

    அது மக்கள் நல்வாழ்வுத்துறை:

    ஆனால் அவரே ஒரு காட்சியில் தனது அறியாமையால் பல்லிழிக்க வைக்கிறார். டெங்குவால் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால், அதற்கு பொறுப்பேற்க வேண்டியது சுகாதாரம் அல்லது மக்கள் நல்வாழ்வுத்துறை. பொதுப்பணித் துறை அல்ல. இது ஏன் உங்களுக்கு தெரியாமல் போனது ஜெயமோகன்.

    கேள்விகள்:

    கேள்விகள்:

    இப்படி பல ப்ளஸ்கள் படத்தில் இருந்தாலும், படத்தில் இடம்பெறும் அதிரடி அரசியல் காட்சிகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. வில்லனின் கட்சி அலுவலகத்துக்குள் நாயகன் நுழைந்து எதிராளியை அடி வெளுப்பது, அப்போது ராதாரவி தனது வழக்கறிஞருக்கு போன் போட்டு, 'அவனை இங்கேயே வச்சி போட்டுடலாமா'? என்று கேட்டதும் அந்த வழக்கறிஞர் 'சீனியரிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டுவிட்டு சொல்கிறேன்' என்பதெல்லாம் படத்தின் சீரியஸ்னசை குறைத்துவிடுகின்றன.

    சினிமாவில் சாத்தியம்:

    சினிமாவில் சாத்தியம்:

    இரண்டாம் பாதியில் நிறைய எமோஷனல் காட்சிகள் இருக்கின்றன. குறிப்பாக தன்னை எதிர்க்கும் குப்பத்து மக்களிடம் தான் யார் என்பதை விவரித்து அவர்களை சென்டிமெண்டாக மடக்கும் விஜய்யின் சமார்த்தியம் பாராட்டத்தக்கது தான். ஆனால் இதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கக் கூடிய ஒன்று.

    காதில் பூ:

    காதில் பூ:

    இவை அனைத்துக்கும் மேலாக க்ளைமாக்ஸ் காட்சியில் காதில் பூ சுற்றியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரோயொரு பேஸ்புக் பதிவின் மூலம் வாக்காளர்களின் மனநிலைமை மாற்றிவிட முடியுமா என்ன? இங்குள்ள தனியார் செய்தி தொலைக்காட்சிகள் எல்லாம் அவ்வளவு நியாயமானதாகவா நடக்கின்றன. மாஸ் காட்டுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா இயக்குனரே.

    தவறான எண்ணம்:

    தவறான எண்ணம்:

    படம் தான் எடுக்கிறீர்கள். நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. படத்தை படமாக மட்டுமே பாருங்கள் என நீங்கள் சொல்வதும் எங்கள் காதுகளில் கேட்காமல் இல்லை. ஆனால் பணம் கொடுத்து தியேட்டருக்கு வரும் மக்களை, ஒரு மாய வலையில் விழவைக்க நினைப்பது நியாயமற்றது. ஒரு ஹீரோவை மாஸாக காட்ட வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் அந்த எண்ணம் தவறானது.

    English summary
    The politics shown in sarkar is possible only in cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X